இந்திய அணியின் இடதுகை மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் புதியதோர் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
19 வயதிற்குட்பட்டோர் உலகக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம், 50 ஓவர் உலகக்கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் ஐ.பி.எல் ஆகிய உலகளாவிய போட்டித் தொடர்களை வென்ற ஒரே ஒருவீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
UEFA சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரித்தது ரியல் மெட்ரிட்
34 வயதான யுவராஜ் சிங் இந்திய அணி 2000ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோர் உலகக்கிண்ணதை வெல்லும் போது இறுதிப் போட்டியில் இடம்பிடித்து இருந்தார். பின் 2002ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியிலும் விளையாடியிருந்தார். இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் கூட்டு சம்பியனாக கிண்ணத்தை வென்றிருந்தனர். அதன் பின் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் அவர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்று முடிவடைந்த 9ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியிலும் சம்பியனான சண் ரயிசஸ் ஹைதராபாத் அணியில் யுவராஜ் விளையாடி இருந்ததன் மூலமே இவர் இந்த புதிய பெருமைக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்