உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இறுதி குழாம் அறிவிப்பு

465

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண தொடர்களுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளுக்கான 23 பேர்கொண்ட இறுதி அணிக் குழாத்தை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்ற அதிரடி மாற்றங்கள்

கட்டாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர்…

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் முதல் சுற்றில் மக்காவு அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இறுதி 23 பேர்கொண்ட குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கடந்த 7ம் திகதி உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான 31 பேர்கொண்ட உத்தேச அணிக்குழாத்தை அறிவித்திருந்த நிலையில், குறித்த குழாத்திலிருந்து 8 வீரர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். இதில், புதிதாக இணைக்கப்பட்டிருந்த மார்வின் ஹெமில்டனும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கான இரட்டை குடியுரிமை இதுவரை கிடைக்காத காரணத்தினால், அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், மொஹமட் இஷான், மொஹமட் இஜாஸ், மொஹமட் வசீத், அப்துல் ரஹ்மான், காலித் அஸ்மில், செபஸ்தியம்பிள்ளை ஜேசுதாசன் மற்றும் சஹாயராஜா ருசே ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும் இதில், சஹாயராஜா ரோச் மற்றும் கலீட் அஷ்மில் ஆகியோர் மேலதிக வீரர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த விடயத்தை கால்பந்தாட்ட சம்மேளனம் உறுதிசெய்யப்படவில்லை.

இலங்கை குழாம்

சுஜான் பெரேரா (கிளப் ஈகிள்ஸ் – மாலைதீவுகள்), ராசிக் ரிஷாட் (ரினௌன் வி.க.), மொஹமட் லுத்பி (இராணுவப்படை வி.க.), மனரம் பெரேரா (கடற்படை வி.க.), ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு கா.க.), டக்சன் பியுஸ்லஸ் (நியூயங்ஸ் கா.க.), மரியதாஸ் நிதர்சன் (ரினௌன் வி.க), கவிந்து இஷான் (விமானப்படை வி.க.), ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை வி.க.), மொஹமட் பஸால் (கொழும்பு கா.க.), ஜூட் சுமன் (ரினௌன் வி.க.), சசங்க டில்ஹார ஜயசேகர (ரத்னம் வி.க.), பெதும் விமுக்தி (ரெட் சன் வி.க.), ஷபீர் ரசூனியா (பொலிஸ் வி.க.), மொஹமட் ஷஹீல் (கடற்படை வி.க.), மொஹமட் ஆகிப் (ரினௌன் வி.க.), மொஹமட் முஸ்தாக் (நியூ ஸ்டார் வி.க.), சுந்தராஜ் நிரேஷ் (சோன்டர்ஸ் வி.க.), ஷலன சமீர (சோன்டர்ஸ் வி.க.),  கீர்த்தி குமார (இராணுவப்படை வி.க.), மதூஷன் டி சில்வா (இராணுவப்படை வி.க.) – திலிப் பீரிஸ் (ரினௌன் வி.க.) – நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க.)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<