2018 உலகக் கிண்ணம்: பிரேசில் அணியின் முன்னோட்டம்

296

பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி வந்ததும் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் பிரேசில் எப்போதும் முன்னணியில் இருக்கும். உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் பலமான அணியாக முன்னெற்றம் கண்ட பிரேசில் அணியை குறைத்து மதிப்பிடுவது முட்டாள்தனமானதாகும்.

2018 உலகக் கிண்ணம்: ஜெர்மனி அணியின் முன்னோட்டம்

கடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

உலகக் கிண்ண வரலாறு

ஐந்து உலகக் கிண்ணங்களை தனது பெயரில் கொண்டிருக்கும் பிரேசில் உலகக் கிண்ண வரலாற்றில் வெற்றிகரமான அணியாக உள்ளது.

உலகக் கிண்ணத்தில் ஒரு வளமான வரலாற்றை கொண்டிருக்கும் பிரேசில் பிஃபா உலகக் கிண்ணத்தின் அனைத்து போட்டித் தொடர்களிலும் பங்கேற்ற ஒரே அணியாகும். அந்த அணி 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்றதோடு 1950 மற்றும் 1998 இல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

2002 இல் உலகக் கிண்ணத்தை வென்ற அணி

அந்த அணியின் வெற்றிகளில் திறமை காட்டிய பீலே, ரிவலினோ, ஜெயிர்சின்ஹோ, ரொமாரியோ, ரொனால்டோ நசரியோ, ரிவால்டோ மற்றும் ரொனால்டினோ அனைவரும் உலக நட்சத்திரங்களாக மாறியவர்களாவர். இவர்களின் பாரம்பரிய சம்பா நடன பாணி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கால்பந்து உலகை மிளிரச்செய்துள்ளது.      

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

2018 ரஷ்ய உலகக் கிண்ணத்திற்கு பிரேசில் முதல் அணியாக தகுதி பெற்றுக்கொண்டது. அந்த அணி தனது CONMEBOL மண்டல தகுதிகாண் போட்டிகளில் தனித்து ஆதிக்கம் செலுத்தியது.

தகுதிகாண் முதல் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் நடந்த சிலிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என தோல்வியை சந்தித்த பிரேசில், எஞ்சிய 17 போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக நீடித்தது. இதன்படி 12 வெற்றி 5 சமநிலையை பெற்றது.

தகுதிகாண் போட்டி முடிவுகளில் தனது சிறந்த போட்டியாளரான ஆர்ஜன்டீனாவுக்கு எதிராக, பிரேசில் 3-0 என வெற்றி பெற்றதோடு கொன்டவிடியோவில் நடந்த உருகுவே உடனான போட்டியில் 4-1 மற்றும் இறுதிப் போட்டியில் சிலிக்கு எதிராக 3-0 என பிரேசில் வெற்றிகளை குறித்தது. இந்த தகுதிகாண் சுற்றின் இறுதி போட்டி பிரேசில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டமாகவும் இருந்தது.   

அந்த அணி தகுதிகாண் சுற்றுக்கு பின்னர் நடந்த நட்புறவு போட்டிகளில் ரஷ்யா (3-0) மற்றும் ஜெர்மனி (1-0) அணிகளை வென்றது.

உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை

உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில் ஆரம்பமாக உள்ளது. உலகக் கிண்ண கால்பந்து போட்டி முடிவுகளை நேரில்…….

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

2014 உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து பிரேசில் தேசிய அணிக்கு டுங்கா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் 2015 கோபா அமெரிக்கா மற்றும் 2016 கோபா அமெரிக்கா சென்டனாரியோவில் முறையே காலிறுதி மற்றும் குழுநிலையில் வெளியேறியது பிரேசில் அணிக்கு ஏமாற்றமாக இருந்தது. இதனால் டுங்காவின் ஒப்பந்தம் பிரேசில் கால்பந்து சம்மேளனத்தால் முறிக்கப்பட்டு எல்லோராலும்டிடேஎன்று அழைக்கப்படும் லியோனார்டோ பக்சி தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.  

டிடே

அவர் தகுதிகாண் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளை பெற அணியை வழி நடத்தியதோடு, அவரது 4-1-4-1 ஆட்ட பாணி பிரேசில் அணி தனது அதிரடி தாக்குதல் ஆட்டத்திற்கு மீண்டும் திரும்ப உதவியது. அவரது வழிகாட்டலின் கீழ் பிரேசில் அணி தென் அமெரிக்க உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் அதிக கோல்கள் (41 கோல்கள்) மற்றும் அதிக கோல் தடுப்புகளை (10) பெற்ற அணியாக பதிவானது.  

நெய்மார் அணியில் இல்லாதபோது ஆட்ட பாணியை 4-3-3 என மாற்றி 2018 ஆரம்பத்தில் ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு எதிரான வெற்றிகளை பெறும் உத்தியையும் டிடே வெளிப்படுத்தி இருந்தார்.

பலமும் பலவீனமும்

2014 உலகக் கிண்ண குழாத்துடன் ஒப்பிடுகையில் பிரேசில் அணி இளையோர் மற்றும் அனுபவ வீரர்களை கொண்டதாக காணப்படுகிறது. நெய்மார், ஜேசுஸ், கோடின்ஹோ மற்றும் வில்லியன் போன்ற வேகம் மற்றும் நுட்பம் கொண்ட வீரர்கள் பிரேசில் அணியின் கொடை என்பதோடு அது வலுவான எதிரணிக்குக் கூட தலையிடியை ஏற்படுத்துவதாகும்.  

>>காணொளிகளைப் பார்வையிட<<  

எவ்வாறாயினும் அவர்களது முன்கள வீரர்கள் காயங்களுக்கு முகம்கொடுத்தவர்கள் என்ற நிலையில், உடல் நிலை போட்டி திட்டத்தில் உட்படுத்தப்படுவது ஆட்ட வேகத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடும். இதற்கு மேலதிகமாக அவர்களது பின்கள வீரர்கள் குறிப்பாக மார்சலோ முன்களத்தில் செயற்பட விருப்பம் உடையவர்களாக இருப்பது எதிரணிக்கு பதில் தாக்குதல் நடத்த வசதியை ஏற்படுத்துவதாக உள்ளது.       

தகுதிகாண் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய டானி அல்வேஸ் காயத்திற்கு உள்ளாகி இருப்பது பிரேசில் அணிக்கு பெரும் இழப்பாகும். பிலிப்பே லுயிஸ் அவருக்கு மாற்றாக செயற்பட வாய்ப்பு இருந்தபோதும் அல்வேஸ் அளவுக்கு அது எதிரணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாக இருக்காது. அல்வேஸ் தனது காயம் வரை ஜுவான்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி வந்தார்.

நெய்மாரும் இந்த பருவாத்தில் உபாதைக்கு முகம்கொடுத்தார். என்றாலும் அவர் மீண்டும் அணிக்கு திரும்பி கடைசியாக நடந்த உலகக் கிண்ண பயிற்சி போட்டிகளில் தனது வழக்கமான திறமையை வெளிப்படுத்தினார். எனினும் அவர் பிரேசிலுக்கு தேவையான ஆட்டத்தை உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்துவது அவசியமாகும்.  

முக்கிய வீரர்கள்

2014 உலகக் கிண்ண போட்டியை போன்று இம்முறையும் நெய்மார் பிரேசில் அணியின் முக்கிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனையும் விஞ்சி டிடே அவரைநிகரில்லாதவர்என்று வர்ணிக்கிறார்.

தகுதிகாண் போட்டிகளில் நெய்மார் ஆடிய 14 போட்டிகளில் 6 கோல்கள் மற்றும் 8 கோல் உதவிகளை செய்துள்ளார். இது அவர் அணிக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை காட்டுகிறது. டிடெவின் காலத்தில் கப்ரியல் ஜேசுஸ் பல போட்டிகளில் ஆடியவர் என்ற வகையில் தகுதிகாண் போட்டிகளில் பிரேசில் அணிக்காக அதிகபட்சம் 7 கோல்களை போட்டார்.   

உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) மிகப் பெரிய மோதலான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 21 ஆவது அத்தியாயம்…….

டிடேவின் கீழ் மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டி வரும் மற்றொரு வீரராக போலின்ஹோ உள்ளார். 11 தகுதிகாண் போட்டிகளில் ஆடிய அவர் ஆறு கோல்களையும் (உருகுவேயுக்கு எதிரான ஹட்ரிக் கோல் உட்பட) 2 கோல் உதவிகளையும் பெற்றார். அவரது இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டில் அதிகம் பிரபலம் இல்லாத சீன லீக்கில் இருந்து பார்சிலோனா அணிக்கு வர முடிந்தது.  

கோடின்ஹோ, நெய்மார் மற்றும் ஜேசுஸ்

இவர்கள் தவிர மைதானத்தில் கோல்காப்பளராக எடர்சனின் இடத்திற்கு அலிசன் பரிந்துரைக்கப்படுவதோடு, பின்களத்தில் தியாகோ சில்வா அபாரமாக செயற்படுகிறார். ரியெல் மெட்ரிட்டில் எழுச்சி பெற்ற கசமிரோ 4-1-4-1 என்ற அமைப்பில் தனது வழக்கமான இடமான மத்திய களத்தில் தனியே நிலைகொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பார்க்க வேண்டியது

நெய்மார் மற்றும் கப்ரியல் ஜேசுஸ் போன்ற வீரர்கள் பிரகாசிக்கும் நிலையில் பிரேசில் அணி முன்னேறிச் செல்வதில் போலின்ஹோ மத்தியகளத்தில் இருப்பது தீர்க்கமானதாக அமையும்.

போலின்ஹோ

போலின்ஹோ இந்த பருவத்தின் லா லிகா தொடரில் 33 போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக 8 கோல்களுடன் 2 கோல் உதவிகள் பெற்று சோபித்தார். டிடேவின் அணியில் முக்கிய வீரராக உள்ள அவர் மத்திய களத்தில் ரெனாடோ அகஸ்டோவுடன் முக்கிய வீரராக தொடருவார் என்று எதிர்பார்க்கலாம்.

 

இறுதிக் குழாம்

கோல்காப்பாளர்கள்

அலிசன், எடர்சன், கசியோ

பின்கள வீரர்கள்

தியாகோ சில்வா, மிரன்டா, மார்குயின்ஹோஸ், மார்செலோ, பிலிப்பே லுயிஸ், பக்னர், பெட்ரோ ஜெர்மல், டனிலோ

மத்தியகள வீரர்கள்

போலின்ஹோ, கசெமிரோ, பிலிப்பே கோடின்ஹோ, ரெனாடோ அகஸ்டோ, ப்ரெட், பெர்னன்டின்ஹோ, வில்லியன்

முன்கள வீரர்கள்

நெய்மார், டக்லஸ் கொஸ்டா, கப்ரியல் ஜேசுஸ், ரொபர்டோ பிர்மினோ, டைசன்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<