டயலொக் ஜனாதிபதி தங்கக்கிண்ண இறுதிப் போட்டியில் ரன்தரு, யுனைடட் அணிகள்!

Dialog President’s Gold Cup Volleyball Championship 2021

121

டயலொக் ஜனாதிபதி தங்கக்கிண்ணம் 2021 கரப்பந்தாட்ட தொடரின் ஆண்டுகளுக்கான அரையிறுதிப்போட்டிகள் நேற்றைய தினம் (29) காலி கரப்பந்தாட்ட அரங்களில் நடைபெற்று முடிந்திருந்தது.

இதில், பொரலஸ்கமுவ பலர்ஸ் அணியை 3-0 என வீழ்த்திய தெபேகம ரன்தரு மற்றும் ஹொரண வாஸனா அணியை 3-0 என வீழ்த்திய நாத்தாண்டிய யுனைடட் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

ஆசிய இளையோர் பரா போட்டிகளில் 8 இலங்கையர் பங்கேற்பு

ஹொரண வாஸனா எதிர் நாத்தாண்டிய யுனைடட்

ஹொரன வாஸனா மற்றும் நாத்தாண்டிய யுனைடட் ஆகிய பலம் மிக்க இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்தப்போட்டியின் முதல் செட்டில் சமபலமான ஆட்டத்தை இரண்டு அணிகளும் வெளிப்படுத்திய போதும், இறுதியில் 25-23 என நாத்தாண்டிய யுனைடட் அணி வெற்றிக்கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் முதல் செட் போன்று கடுமையான போட்டியை கொண்டதாக இருந்தாலும், மீண்டும் 25-23 என நாத்தாண்டிய யுனைடட் அணி செட்டை கைப்பற்றியது. இரண்டு செட்களிலும் சிறந்த வெற்றியை பெற்றிருந்த நாத்தாண்டிய யுனைடட் அணி, மூன்றாவது செட்டிலும் ஹொரண வாஸனா அணியை 25-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

எனவே, போட்டியின் நிறைவில் 3-0 என்ற செட் கணக்கில் போட்டியைக் கைப்பற்றிய ஹொரண வாஸனா அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

தெபேகம ரன்தரு எதிர் பொரலஸ்கமுவ பலெர்ஸ்

தெபேகம ரன்தரு மற்றும் பொரலஸ்கமுவ பலெர்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையறுதிப் போட்டியின் முதல் செட் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

இந்த போட்டியின் முதல் செட்டில் சிறப்பான ஆட்டத்தை தெபேகம ரன்தரு வெளிப்படுத்த, பொரலஸ்கமுவ பலெர்ஸ் கடுமையான போட்டியை கொடுத்தது. எனினும், தெபேகம ரன்தரு 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை வெற்றிக்கொண்டது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், மேலும் பலமான ஆட்டத்தை தெபேகம ரன்தரு அணி வெளிப்படுத்த, பொரலஸ்கமுவ பலெர்ஸ் அணி 15-25 என செட்டை இழந்தது. இதேவேளை, மூன்றாவது செட்டையும் 25-19 என கைப்பற்றிய தெபேகம ரன்தரு அணி 3-0 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்மூலம் இறுதிப் போட்டியில், தெபேகம ரன்தரு அணியானது, நாத்தாண்டிய யுனைடட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, நேற்று (29) மாலை இடம்பெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பொரலஸ்கமுவ பலராஸ் அணி 2-1 என்ற செட்கள் கணக்கில் ஹொரண வாஸனா அணியை வெற்றிக்கொண்டது. முதல் செட்டில் 25-23 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிப்பெற்று சிறப்பான ஆரம்பத்தை ஹொரண வாஸனா அணி பெற்றுக்கொண்டாலும், அடுத்த இரண்டு செட்களையும் முறையே 25-18 மற்றும் 31-29 என்ற புள்ளிக்கணக்கில் பொரலஸ்கமுவ பலெர்ஸ் அணி வெற்றிக்கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<