நியுசிலாந்து டெஸ்ட் அணித் தலைவராக வில்லியம்சன்

754
Kane Williamson

நியுசிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் ப்ரெண்டன் மெக்கலம் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் கடந்த பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா அணியோடு விளையாடி இருந்தார்.

அவரது ஓய்வின் பின் 25 வயதான நியுசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் நியுசிலாந்து அணியின் டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியுசிலாந்து அணியின் 29வது டெஸ்ட் தலைவர் என்ற பெயருக்கு உரித்தாகிறார். அத்தோடு அவர் அதிகாரப்பூர்வமாக மூன்று வடிவங்களிலான (டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளிலும் நியுசிலாந்து அணியை வழிநடாத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலங்க சுமதிபாலவின் பரிந்துரையை ஐ.சி.சி ஏற்றதா?

இது தொடர்பாக நியுசிலாந்து கிரிக்கட் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வைட் கூறுகையில் “கேன் வில்லியம்சன் நியுசிலாந்து அணியை  நீண்டகாலமாகத் தலைமை வகித்துள்ளார், மேலும் தான் ஒரு மிக திறமையான தலைவர் என்பதை ஏற்கனவே காண்பித்துள்ளார். அவர் அவரது சிறந்த கிரிக்கட் அணுகுமுறையினால் சக வீரர்கள் மற்றும் பரந்த கிரிக்கட் சமூகத்தில் மதிக்கப்படும் வீரர், அத்தோடு அவரிடம் அற்புதமாக கிரிக்கட் அறிவு காணப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இம்மாத ஆரம்பத்தில் முடிவுற்ற டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் போது நியுசிலாந்து அணியின் தலைவராக செயற்பட்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்து இருந்தார். இதுவரை நியுசிலாந்து அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கலாக மொத்தமாக 36 போட்டிகளில் விலியம்சன் வழிநடாத்தியுள்ளார். அத்தோடு நியுசிலாந்து டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் ஜோன் பார்க்கர் ஆகியோருக்குப் பின் இளம் வயதில் தலைமைத்துவத்தை பெறும் 3வது வீரராக கேன் வில்லியம்சன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்