மீண்டும் ஏன் இலங்கை திரும்பினார் மாலிங்க

4736

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக இலங்கை அணி முகாமைத்துவம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி துரதிஷ்டவசமாக 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க

இலங்கை அணியின் முன்னணி வேகப் ………..

இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இரண்டாவது முறைாயக மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இவர், தனது மனைவியின் தாயார் காலமானதைத் தொடர்ந்து ஏற்கனவே நாடு திரும்பியிருந்தார். தனது கடமைகளை முடித்துக்கொண்டு, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிக்கு முதல் நாள் இரவு மீண்டும் இலண்டனைச் சென்றடைந்ததுடன், ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார்.

எனினும், குறித்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், மாலிங்க போட்டியை தொடர்ந்து 3 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். மனைவியின் தயாரின் நினைவுகூர்தல் நிகழ்வுக்காகவே மாலிங்க இவ்வாறு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்பியுள்ள லசித் மாலிங்க நாளைய தினம் (19) மீண்டும் இங்கிலாந்துக்கு சென்று அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் இவரால் அணியின் பயிற்சி மற்றும் அடுத்தப் போட்டிக்கான திட்டமிடல் சந்திப்பு என்பவற்றில் பங்குக்கொள்ள முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க 61 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார். இதேவேளை,  இலங்கை அணி தங்களுடைய அடுத்தப் போட்டியில், இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணியை எதிர்வரும் 21ம் திகதி எடிங்லேவ் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<