சரித்திரத்தை மாற்றிய இங்கிலாந்தின் அடுத்த இலக்கு நியூசிலாந்து

293
©Getty

அவுஸ்திரேலியாவை சிறந்த முறையில் எதிர்கொண்டு வெற்றி பெற்றது போல எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியிலும் எங்களால் முடிந்தளவு அனைத்தையும் கொடுத்து வெற்றி பெறுவோம் என இங்கிலந்து கிரிக்கெட் அணித் தலைவர் இயென் மோர்கன் தெரிவித்துள்ளார். 

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால் 27 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுக் கொண்டது

27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு ……..

அத்துடன், கடந்த நான்கு வருடங்களில் இங்கிலாந்து அணி வலிமையாக வளர்ந்த போதிலும், நொக் அவுட் போட்டிகளில் இங்கிலாந்து எப்போதும் நெருக்கடியை சந்தித்து வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சம்பியன்ஸ் கிண்ணத்தில் அவர்கள் பாகிஸ்தானிடம் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியிருந்தனர்

எனவே, 2015 உலகக் கிண்ணத்தில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு வியக்கத்தகு திருப்பத்தை ஏற்படுத்தி, அந்த அணியை வழிநடத்திய மோர்கன், மீண்டும் அந்த அணியை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  

இதுஇவ்வாறிருக்க, நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியமை தொடர்பில் இயென் மோர்கன் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில்

இந்த வெற்றி மிகவும் அருமையாகவும், நன்றாகவும் இருக்கிறது. இறுதியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் எமது செயல்திறனை எடுத்துக் கொண்டால் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக வந்துள்ளோம். நாங்கள் ஒரு அணியாக, நன்றாக அனுபவிக்கக் கற்றுக் கொண்டோம்.

ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வந்து போட்டியாளர்களாக இருப்பதற்கு நாங்கள் ஒரு அணியாக விளையாட வேண்டும் என்று நாங்கள் போட்டிக்கு முன்பு பேசினோம். இன்று ஒரு படி முன் வந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன் என்றார்

ஐ.சி.சி. இன் அபராதத்தினை எதிர்கொள்ளும் ஜேசன் ரோய்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப ……..

இதேநேரம் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பிரிவின் செயல்திறன் குறித்து மோர்கன் கருத்து வெளியிடுகையில்,

”மைதானத்தில் உள்ள அனைவரையும் போல உடைமாற்றும் அறையில் இருந்தவர்கள்கூட வீசப்பட்ட ஒவ்வொரு பந்தையும் நேசித்தார்கள். வீரர்களின் அர்ப்பணிப்புக்கு குறைவு இருக்கவில்லை. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டது அருமை. இது கடந்த நான்கு வருடங்களில் அவர்களின் முழுமையான செயல்திறன் ஒன்றிற்கு நெருக்கமாக இருந்தது. எங்கள் திட்டங்களை இலகுவாக செயல்படுத்த முடிந்தது” 

ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் இணைப்பாட்டமொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது அதை வீழ்த்துவதற்கு ஏதாவது ஒரு வாய்ப்பை கண்டுபிடித்ததாக மோர்கன் குறிப்பிட்டார்.   

தமது அணியின் முன்னேற்றத்திற்கான காரணங்களைக் குறிப்பிட்ட மோர்கன், ”இது கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் முன்னெடுத்த ஒரு செயல்முறையாகும். நாங்கள் சிறந்த அணிகளுக்கும், அதற்குக் கீழே இருந்த அணிகளுக்கும் எதிராகப் போராடினோம். எனவே, நாங்கள் விளையாடிய விதத்திலும் முறையிலும் மிகவும் கடுமையான மாற்றம் ஏற்பட்டது

நாங்கள் எங்கள் 50 ஓவர்கள் கிரிக்கெட்டை விளையாடுகின்ற விதத்தைப் பார்த்தோம். அது எங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டது மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் உள்ள அதிகாரிகளும் இதுவரை தங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்”  என்றார். 

இதேவேளை, 1992ஆம் ஆண்டு அயர்லாந்தில் இயொன் மோர்கன் ஆறு வயது குழந்தையாக இருந்தார். அந்த வருடம் தான் கடைசியாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது

எனவே, சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தை மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற பெருமையை மோர்கன் பெற்றுக் கொடுத்தார். எனவே, எதிர்வரும் (ஜூலை) 14ஆம் திகதி லோர்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர்கள் நியூசிலாந்தை எதிர்கொள்வார்கள்.

இதேநேரம், சகலதுறையிலும் பிரகாசித்த கிறிஸ் வோக்ஸ் குறித்து பேசிய மோர்கன், கிறிஸ் வோக்ஸ் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் எமது அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரும் ஜொப்ராவும் (ஆர்ச்சர்) சிறந்த முறையில் செயல்பட்டனர்.” 

அத்துடன், இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பேர்ஸ்டோவ் ஆகியோரை மோர்கன் இதன்போது பாராட்டினார்

”ரோய் மற்றும் ஜொன்னி ஆகிய இருவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபாரமாக விளையாடியிருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் வடிவத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுக்கிறார்கள” என கூறினார்

ஐ.சி.சி. இன் அபராதத்தினை எதிர்கொள்ளும் ஜேசன் ரோய்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப ……….

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான இறுதிப் போட்டிக்கான ஆயத்தம் குறித்து மோர்கன் கருத்து தெரிவிக்கையில்

”ஞாயிற்றுக்கிழமை மற்றொரு பாரிய நாள் காத்திருக்கிறது. அது வெட்கப்பட வேண்டிய நாள் அல்ல என்று நான் நினைக்கிறேன். இன்றைய போட்டியைப் போல எதிரணியை சிறந்த முறையில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நாள். ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அந்த நாளை அனுபவிக்கக்கூடிய அனைத்தையும் மீண்டும் உருவாக்க முயற்சிப்பது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

2018 ஜூலை 11 இதே போன்ற நாளில் உலகக் கிண்ணத்திலிருந்து இங்கிலாந்தின் கால்பந்து அணி வெளியேற்றப்பட்டது. ஜூலை 11, 2019 இன்று, இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நுழைந்தது

நான் இன்னும் எடுத்துச் செல்ல மாட்டேன் என்று மோர்கன் சிரித்தார். இது எல்லோருக்கும் மிகவும் உற்சாகமான நேரமாகும். ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை வழங்குவது புத்திசாலித்தனமானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டை முயற்சித்து வெல்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம் என அவர் உறுதியுடன் தெரிவித்தார்

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<