ஷெவோன் டேனியல் தலைமையில் UAE செல்லும் இலங்கை U19 அணி!

Sri Lanka U19 tour of UAE 2023

134

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள முக்கோண மற்றும் இருதரப்பு தொடர்களுக்கான இலங்கை 19 வயதின் கீழ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 19 வயதின் கீழ் அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் முக்கோண ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

குறிப்பிட்ட இந்த முக்கோணத் தொடர் இம்மாதம் 20ம் திகதி முதல் 28ம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதின் கீழ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இந்தப்போட்டிகளுக்கான முதற்கட்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதிலிருந்து 15 பேர்கொண்ட குழாத்தை இன்று செவ்வாய்க்கிழமை (14) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தின் தலைவராக LPL தொடரில் தம்புள்ள ஓரா அணியில் விளையாடிய ஷெவோன் டேனியல் பெயரிடப்பட்டுள்ளார்.

அதேநேரம் ஏற்கனவே இலங்கை 19 வயதின் கீழ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள வீரர்கள் பலர் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் டிரவீன் மெதிவ் மற்றும் மல்ஷ தருபதி ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதின் கீழ் அணி!

ஷெவோன் டேனியல் (தலைவர்), ஹிரான் ஜயசுந்தர, ஹிருன் கபுருபண்டார, டிரவீன் மெதிவ், விஹாஷ் தெவ்மிக, விஷேன் ஹலம்ப, விஷ்வ ராஜபக்ஷ, தீரக ரணதுங்க, மனுல குலரத்ன, டினுர கலுபான, விஷ்வ லஹிரு, சினெத் ஜயவர்தன, மல்ஷ தருபதி, துவிந்து ரணதுங்க, கருக சங்கீத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<