அர்ஜுனவின் கருத்துக்கு பதில் வழங்கிய ஆகாஷ் சோப்ரா

494

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க இலங்கை வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினை இரண்டாம் நிலை அணி என அழைத்திருந்த விடயம் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த கருத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான ஆகாஷ் சோப்ரா பதில் வழங்கியிருக்கின்றார். 

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாட டில்ஷானுக்கு அழைப்பு

சிக்கர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் இலங்கை வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது. 

சிக்கர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோஹிட் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க குறித்த அணியினை இந்தியாவின் இரண்டாம் நிலை அணி என குறிப்பிட்டிருந்ததோடு, இந்த அணியுடன் விளையாட சம்மதித்தது இலங்கை கிரிக்கெட் சபை செய்த அவமதிக்க கூடிய ஒரு செயல் எனவும் விமர்சனம் செய்திருந்தார்.  

எனினும் இதற்கு தனது YouTube சேனல் மூலம் பதில் வழங்கியிருக்கும் ஆகாஷ் சோப்ரா இவ்வாறு தெரிவித்தார்.  

பும்ரா, சமி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லை என்பதால், இது (இந்தியாவின்) பிரதான அணி இல்லை என்பது உண்மைதான். ஆனால், இது உண்மையில் (இரண்டாம் நிலை) B அணி போன்றதா??”

”நாம் இந்தியாவின் எதிர்பார்க்கை ஒருநாள் பதினொருவர் அணியினை நோக்கும் போது அவர்கள் மொத்தமாக 471 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கின்றனர். இது முதல் நிலை அணி இல்லை என்பது உண்மைதான். மறுமுனையில் இலங்கை அவர்களின் அணியினை தெரிவு செய்யும் போது, அவர்கள் அனைவரும் எத்தனை போட்டிகளில் ஆடியிருப்பார்கள் என்பதனைப் பார்க்க ஆர்வமாக உள்ளது. நீங்கள் அனுபவத்தினை அனுபவத்தினுடன் ஒப்பிட நினைக்கும் போது, அது மிகவும் சிறந்த பயிற்சியாக இருக்கும்.” என்றார். 

“இலங்கை வந்திருப்பது இந்தியாவின் இரண்டாம் நிலை அணி அல்ல” ; SLC

அதேநேரம் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக கடமை புரியும் ஆகாஷ் சோப்ரா, இலங்கை அணி அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய விடயத்தினை, இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை விட பின்தங்கிய நிலையில் இருக்கின்றது எனக் குறிப்பிட்டு  சுட்டிக்காட்டியிருந்தார்.  

இலங்கை கிரிக்கெட் அணி அவர்களின் உள் நிலைமையினையும் பார்க்க வேண்டும். உண்மையினைச் சொல்லப் போனால் ஆப்கானிஸ்தான் T20 உலகக் கிண்ணத்தின் Qualifier சுற்றினை விளையாடத் தேவையில்லை. ஆனால் (இலங்கையாகிய) நீங்கள் விளையாட வேண்டும். இதுதான் உண்மை நிலை. உண்மை என்னவெனில், இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் தடுமாற்றமான நிலையில் தற்போது காணப்படுகின்றது. இங்கிலாந்துடனான இலக்கங்களை எடுத்துப்பார்த்தாலும் அதுதான் உண்மை.”

அதோடு அவர்கள் (இலங்கை) T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுக் கொள்ள முடியாத ஒரு சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. அதாவது அவர்களுக்கு (T20 உலகக் கிண்ணத்தின்) பிரதான சுற்றுக்குள் உள்நுழைய முடியாத நிலை இருக்கின்றது. (இலங்கையாகிய) உங்களுக்கு சுபர் 12 இல் உள்ளடங்க முடியாத நிலையும் இருக்கின்றது. இதுவும் உண்மையான நிலை ஒன்று என்பதோடு, ஆப்கானிஸ்தான் இவ்வாறான விடயங்களை ஏற்கனவே தாண்டியிருக்கின்றது.” 

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையும் இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நிலை இல்லை என அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source – Hindustan Times

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…