க்ரிக்கிங்டம் பயிற்சி அகடமியின் விளம்பர தூதரானார் ரோஹித் சர்மா

56

டுபாயை மையமாகக் கொண்டு இயங்கும் கிரிக்கெட் பயிற்சி அகடமியான க்ரிக்கிங்டம் (CricKingdom) இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான ரோஹித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிப் போய் கிடக்கிறார்கள்

இணையம் வழியாக கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் டோனி, அஸ்வின்

கொரோனா வைரஸ் தாக்கம்….

இந்த நிலையில், டுபாயை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற கிரிக்கெட் பயிற்சி அகடமியான க்ரிக்கிங்டம், மாணவர்கள், வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது

இதில் 5 வயது முதல் 8 வயது வரை, 8 வயது முதல் 13 வயது வரை, 13 வயதுக்கு மேற்பட்ட கழக மற்றும் முதன்மை பதினொருவர் கிரிக்கெட் வீரர்கள் என வகைப்படுத்தி பயிற்சிகளை அளித்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள அதன் மாணவர்களுக்கு இணையத்தளம் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது

இதன் ஓர் அங்கமாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரான ரோஹித் சர்மாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.  

இதுதொடர்பில் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், க்ரிக்கிங்டம் அகடமியானது நவீன அறிவியல் பயிற்சி முறைகளுடன் விளையாட்டில் புராணக்கதைகளை உருவாக்கி நேரத்தை பரிசோதனை செய்யும் கோட்பாடுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறது.  

இது தொலைநோக்குடையது, மேலும் இது ஒவ்வொரு அம்சத்தையும் தொழில்முறை மற்றும் கட்டமைக்கப்பட்டதாக மாற்ற முற்படுகிறத” என குறிப்பிட்டுள்ளார்

இதேநேரம், கிரிக்கிங்டம் அகடமியுடன் இணைந்து சுமார் 20 பயிற்சியாளர்கள் கடமையாற்றி வருவதுடன், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான தவல் குல்கர்னி, இந்த அகடமியின் ஆலோசகர்களில் ஒருவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<