ஆசியக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்தில் ஹஸன் அலி

206

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் வஸீம் முதுகு உபாதைக்கு உள்ளானதை அடுத்து அவர் 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20I தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் அணியில் அடுத்த உபாதை?

மொஹமட் வஸீம் கடந்த புதன்கிழமை (24) பந்துவீச்சு பயிற்சிகளை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் முதுகு உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையின் அடிப்படையில் மொஹமட் வஸீம் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன் மூலம் ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் இருந்து வெளியேறும் இரண்டாவது வீரராக சஹீன் அப்ரிடியை அடுத்து, மொஹமட் வஸீம் மாறுகின்றார்.

எனினும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு முன்னர் மொஹமட் வஸீம், உபாதையில் இருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் மொஹமட் வஸீமின் பிரதியீட்டு வீரராக பாகிஸ்தான் குழாத்தில் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான ஹஸன் அலி இணைக்கப்பட்டிருக்கின்றார்.

“இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எமக்கு சக்தி” – சில்வர்வூட்

தற்போது பாகிஸ்தானின் நெஷனல் T20 லீக் தொடருக்காக தயாராகி வரும் ஹஸன் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தொழில்நுட்பக் குழு (Technical Committee) அனுமதி வழங்கிய பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகி அங்கிருக்கும் பாகிஸ்தான் குழாத்துடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் விளையாடும் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) துபாய் நகரில் இந்திய அணியுடன் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<