கிரிக்கெட் உலகை அபூர்வமாக்கிய ஆப்கான் – ஜிம்பாப்வே ஒரு நாள் தொடர்

882

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள நிலையில், அதில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுக்கொண்ட அணிகள் தற்போது முன்னோடி ஒரு நாள் போட்டிகளில் தமது பலத்தை காண்பிக்கும் வகையில் விளையாடி வருகின்றன.

[rev_slider LOLC]

ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டிக்கான திகதி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த வருடம் டெஸ்ட் வரம்…

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இடம்பெறும் ஒரு நாள் போட்டித் தொடரில் 2ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு ஒத்த விதத்திலேயே வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் ஒன்று கிரிக்கெட் உலகின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ரஹ்மத் ஷாவின் சதத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் 334 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஷித் கான் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று(11) நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, பிரண்டன் டெய்லரின் சதம் (125), மற்றும் சிகந்தர் ராசாவின்(92) அரைச்சதத்தின் உதவியால் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயல்திறன் முகாமையாளர் வில்லிஸ் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) உயர் செயல்திறன் முகாமையாளரான …

எனினும், ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆப்கான் அணி 30.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியின் தலைவர் கிரஹம் க்ரீமர் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.  

முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 334 ஓட்டங்கள் எடுத்து, ஜிம்பாப்வேயை எவ்வாறு 154 ஓட்டங்களினால் சுருட்டி வெற்றி பெற்றதோ, அதேபோல், 2ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அதே ஓட்டங்களை எடுத்து, ஆப்கானிஸ்தானை அதே 154 ஓட்டத்தினால் சுருட்டி வெற்றி பெற்றது.

இவ்வாறு முதல் இரண்டு போட்டிகளும் அபூர்வமாக நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி நாளை(13) சார்ஜாவில் நடைபெறவுள்ளது.