உலக பல்கலைக்கழக விளையாட்டில் ஒமாயாவின் அதிசிறந்த நேரப் பெறுமதி

118

உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் முதலாவது நாளாள நேற்று (08) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஒமாயா உதயங்கனி, தனது அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவு செய்தார். 

உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இத்தாலியில் நடைபெற்று வருகின்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான…

உலகம் பூராகவும் உள்ள பல்கலைக்கழங்களைச் சேர்ந்த சுமார் 1000இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற 30ஆவது கோடைக்கால யுனிவெர்சியாட் மெய்வல்லுனர் போட்டிகள் இத்தாலியின் நெப்போலியில் உள்ள சென் போலோ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, போட்டிகளின் முதல் நாளான நேற்று (08) இலங்கை சார்பாக நான்கு வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்

இதில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டி தகுதிச் சுற்றில் பங்குகொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒமாயா உதயங்கனி 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

குறித்த போட்டியை 56.73 செக்கன்களில் நிறைவு செய்த ஒமாயா, தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார். எனினும், அடுத்த சுற்றில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், பெண்களுக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தார்

இதனையடுத்து நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஒட்டப் போட்டியிலும் பங்குகொண்ட ஒமாயா, தனது அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவு செய்தார்

வட மாகாண பாடசாலைகள் மெய்வல்லுனரில் மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் தங்கம்

வட மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 2019ஆம் ஆண்டிற்கான வடக்கு…

குறித்த போட்டியை 12.28 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இஷான் லஹிரு (50.77 செக்.) மற்றும் லக்னாத் கவிந்து (49.22 செக்.) ஆகியோர் முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பெற்று ஏமாற்றம் அளித்தனர்

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கிஹான் ரணவீர, போட்டியை 11.36 செக்கன்களில் நிறைவு செய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், துரதிஷ்டவசமாக அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<