லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்!

2516

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த லங்கன் ப்ரீமியர் லீக்கினை (LPL) நடத்துவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்று (24) வழங்கியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், இலங்கையில் ஆரம்பிக்கப்படவிருந்த குறிப்பிட்ட வகை தொடர் கடந்த ஆண்டுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், நடைபெறவில்லை

மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக்

எனினும், இந்த ஆண்டு லங்கன் ப்ரீமியர் லீக் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கு கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும அனுமதி வழங்கியுள்ளார்

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 வைரஸ் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால், பல நாடுகளிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் குறைந்து வருகின்றது. அத்துடன், கொவிட்-19 சமூகப்பரவலாக மாறவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவரும் நோக்கில், லங்கன் ப்ரீமியர் லீக்கினை நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அத்துடன், இந்த தொடர் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் IPL இல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள க்ரிஸ் கிரீன்

இலங்கை கிரிக்கெட் சபை வெளிநாட்டு வீரர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், 5 அணிகளைக் கொண்ட இந்த தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சர்வதேச நாடுகளின் கிரிக்கெட் தொடர்கள் பிற்போடப்பட்டு வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் இந்த தொடரை நடத்துவதற்கான சரியான தருணம் இதுவென கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<