ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடவுள்ள மஹீஷ் தீக்ஷன

163

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) T20 தொடரின் 2022ஆம் பருவகாலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மாயஜால சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

LPL 2022; தக்கவைக்கப்பட்ட மற்றும் நேரடி ஒப்பந்த வீரர்கள்

CPL தொடர் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி தொடரில் தமக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆடும் ஐந்து வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷன மாறியிருக்கின்றார்.

இந்த ஆண்டு முதன் முறையாக இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரிலும் பங்கேற்ற தீக்ஷன சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக, தனது கன்னி IPL பருவத்தில் மொத்தமாக 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் பிரகாசித்திருந்தார்.

அதேநேரம், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக இலங்கையின் அதிரடி சகலதுறைவீரர் சீக்குகே பிரசன்னவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார். சீக்குகே பிரசன்ன கடந்த 2019ஆம் ஆண்டிலும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணியில் திடீரென பல மாற்றங்கள்

இவர்கள் தவிர CPL தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வெளிநாட்டு வீரராக காணப்படுகின்ற கொலின் முன்ரோ, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் டிம் சய்பேர்ட் மற்றும் அமெரிக்காவின் அலி கான் போன்ற வீரர்களும் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியின் ஏனைய வெளிநாட்டு வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதேநேரம், ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியில் T20 நட்சத்திர அதிரடி வீரர்களான அன்ட்ரூ ரசல், சுனில் நரைன் மற்றும் கீய்ரோன் பொலார்ட் ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<