சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கும் வஹாப் ரியாஸ்

133

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.  

கொழும்பு அணியை வீழ்த்தி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது கோல் டைட்டன்ஸ்!

38 வயது நிரம்பிய வஹாப் ரியாஸ் கடைசியாக 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் போட்டியொன்றில் ஆடியிருந்தார். இதேநேரம் பாகிஸ்தான் அணிக்காக மூன்று ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் ஆடியிருக்கும் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (27 டெஸ்ட், 91 ஒருநாள், 36 T20I) மொத்தமாக 237 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த 2008ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற வஹாப் ரியாஸ், கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்ததோடு அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தனது கவனத்தினை செலுத்தவிருப்பதாக கூறியிருந்தார். அதன் பின்னர் சிறிது காலத்திற்கே அவரினால் பாகிஸ்தான் அணிக்காக ஆட முடிந்தது 

தனது ஓய்வு குறித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் வஹாப் ரியாஸ் தன்னால் தாயக அணியான பாகிஸ்தானை பிரதிநிதித்துவம் செய்ய முடிந்ததனை கௌவரமாகவும், பெருமையாகவும் கருதுவதாக கூறியிருந்ததோடு சர்வதேச போட்டிகளைத் தொடர்ந்து உள்ளூர் லீக் தொடர்களில் தொடர்ந்து ஆட விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார் 

தென்னாபிரிக்க அணியில் டெவால்ட் பிரேவிஸ்

அதன்படி வஹாப் ரியாஸ் இனி தொடர்ந்து உள்ளூர் லீக் தொடர்களில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. வஹாப் ரியாஸ் இறுதியாக நடைபெற்ற முடிந்த PSL T20 லீக் தொடரில் பெஷாவர் ஷல்மி அணிக்காக ஆடியதோடு மொத்தமாக 11 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<