T20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வஹாப் ரியாஸ்

Pakistan Cricket

128

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் T20 கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

T20 கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை வஹாப் ரியாஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

>> அப்ரிடிக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு தலைவர்!

வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் தேசிய அணியில் தொடர்ந்து விளையாடாவிட்டாலும், சர்வதேசத்தில் நடைபெறும் T20 லீக் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.

இவர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், T20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

வஹாப் ரியாஸ் 2005ம் ஆண்டு முதல் T20 போட்டிகளில் விளையாடி வருவதுடன் 335 போட்டிகளில் 401 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். வஹாப் ரியாஸ் 401 விக்கெட்டுகளை சாய்த்துள்ள நிலையில், அந்த அணியின் மற்றுமொரு வீரர் சஹீட் அப்ரிடி 329 போட்டிகளில் 347 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை 556 போட்டிகளில் 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மேற்கிந்திய தீவுகள் வீரர் டுவைன் பிராவோ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<