அணித்தலைவராக பொண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

78
©ICC

பங்களாதேஷ் அணிக்கு எதிரான வரலாற்று பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி டெஸ்ட் அரங்கில் அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போன்ற இரு தொடர்களில் பங்கேற்கிறது. சுற்றுப்பயணத்தின் இறுதி போட்டியான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (22) கொல்கத்தா ஈடின் கார்டின்ஸ் மைதானத்தில் வரலாற்று பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகியது.

Video – பாகிஸ்தான் தொடருக்கு செல்லப்போகும் இலங்கை வீரர்கள் யார்? Cricket Kalam 37

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு…..

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்ல 59 ஓட்டங்களை குவித்துள்ளார். குறித்த போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 32 ஓட்டங்களை கடந்த போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணித்தலைவராக 5,000 ஓட்டங்களை கடந்தார்.

அணித்தலைவராக குறித்த 5,000 ஓட்டங்களை விராட் கோஹ்லி 86 இன்னிங்சுகளில் கடந்தார். இவ்வாறு விராட் கோஹ்லி 86 இன்னிங்சுகளில் கடந்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் விரைவாக 5,000 ஓட்டங்களை கடந்த அணித்தலைவர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்கின் குறித்த சாதனையை இலகுவாக முறியடித்துள்ளார். 

குறித்த 5,000 ஓட்டங்களை ரிக்கி பொண்டிங் 97 இன்னிங்சுகளில் கடந்து முதலிடத்தில் காணப்பட்டார். ஆனால் தற்போது 86 இன்னிங்சுகளில் கடந்த விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். மேலும் டெஸ்ட் அரங்கில் இதுவரையில் 6 அணித்தலைவர்கள் மாத்திரமே 5,000 ஓட்டங்களை கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை டெஸ்ட் அரங்கில் விரைவாக 4,000 ஓட்டங்களை கடந்த அணித்தலைவர் வரிசையில் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் 4,000 ஓட்டங்களை 65 இன்னிங்சுகளில் கடந்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியுடன்…..

டெஸ்ட் அரங்கில் விரைவாக 5,000 ஓட்டங்களை கடந்த அணித்தலைவர்கள்

  1. விராட் கோஹ்லி (இந்தியா) – 86 இன்னிங்ஸ்
  2. ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா) – 97 இன்னிங்ஸ்
  3. கிளைவ் லொயிட் (மேற்கிந்திய தீவுகள்) – 106 இன்னிங்ஸ்
  4. கிரேம் ஸ்மித் (தென்னாபிரிக்கா) – 110 இன்னிங்ஸ்
  5. அலன் போடர் (அவுஸ்திரேலியா) – 116 இன்னிங்ஸ்
  6. ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) – 130 இன்னிங்ஸ்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<