இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் : அதபத்துவின் கருத்து   

159

மார்வன் அதபத்து இலங்கை கிரிக்கெட் கண்டெடுத்த நேர்த்தியான தொழிநுட்ப ரீதியிலான மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர். பல டெஸ்ட் போட்டிகளில் சனத் ஜயசூரியவுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்கியுள்ள அதபத்து தனது முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 5 முறை எவ்வித ஓட்டமும் பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

எனினும், பிற்காலத்தில் சர்வதேச அளவில் பிரபலமடைந்த அதபத்து 9௦ டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,5௦2 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி 38.48 ஆக உள்ளது. அவரின் அதிகூடிய ஓட்டப்பெருதி ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்டில் பெற்ற 249 ஓட்டங்களாகும். வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் டெஸ்ட் அரங்கில் 2௦௦ ஓட்டங்களை 6 தடவைகள் பெற்றுள்ளார். 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அதபத்து 8,529 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது நிகர சராசரி 37.57 ஆகும்.

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய…

கடந்த 2௦௦7ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வு பெற்றதன் பின்பு பயிற்றுவிப்பாளராக தனது பயணத்தைத் தொடர்ந்த அதபத்து கனடா மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு குறுகிய காலத்திற்கு தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டார். அதனைத்தொடர்ந்து 2௦11ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்டார்.

2௦14ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய போல் பாப்ரேஸின் விலகலைத் தொடர்ந்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அதபத்து நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஒரு வருடகாலம் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அவர் இலங்கை அணியுடன் கடமையாற்றினார்.

தற்பொழுது கர்நாடக பிரீமியர் லீக்கின் 2௦17 பருவகாலத்திற்காக பெலகவி பெந்தர்ஸ் அணியின் ஆலோசகராகக் கடமையாற்றும் அதபத்துவிடம் விஸ்டன் இந்தியா நிறுவனம் கண்ட செவ்வியின் தமிழ் ஆக்கத்தை ThePapare.com வாசகர்களுடன் நாம் பகிர்ந்துகொள்கின்றோம்.

கேபெலகவி பெந்தர்ஸ் அணியின் ஆலோசகராக உங்களின் பயணம் எவ்வாறு உள்ளது?

            நான் இப்பதவியை பெற்றுக்கொள்ள முன்னர் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொண்டுவிட்டே வந்தேன். இதுவரை அனைத்தும் சிறப்பாகவே உள்ளன. இங்கே சிறந்த சூழல் உள்ளது. அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு கட்டுக்கோப்புக்குள் உள்ளது. உட்கட்டமைப்பு, விளையாட்டின் மீதான ஆர்வம் அனைத்துமே உச்சத்தில் உள்ளது. இங்கே உள்ள இளம் வீரர்கள் கேட்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், தங்களை வளர்த்துக்கொள்வதற்கும் மிகவும் ஆவலாக உள்ளனர். அது எனக்கு ஒரு ஆர்வத்தைத் தருகின்றது.

பாகிஸ்தானுடனான முதல் டெஸ்டில் மெதிவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

ஐக்கிய அரபு இராட்சியத்தின் அபு தாபி நகரில்..

சர்வதேச கிரிக்கெட் ஓய்வைத் தொடர்ந்து நீங்கள் பயிற்றுவிப்பாளராக உங்கள் பயணத்தை தொடர்ந்தீர்கள். எதிர்காலத்தில் இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக மீள இணையும் எண்ணம் உள்ளதா ?

            இப்போதைக்கு அவ்வாறான எண்ணங்கள் எதுவும் இல்லை. அதற்கான காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. நான் அவர்களுடன் நான்கு ஐந்து வருடங்கள் இருந்து விட்டேன். இப்போதுள்ள வீரரகளில் 70% – 80% வீதமானவர்கள் அப்போது என்னுடன் இருந்தார்கள். எனக்குத் தெரிந்த சகல விடயங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். மீள அப்பதவிக்குச் செல்லவோ, நீண்ட கால ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவோ எனக்கு எண்ணம் கிடையாது. எனது கிரிக்கெட் மற்றும் பயிற்றுவிப்பாளர் வாழ்கையை 25 வருடங்களுக்கு மாத்திரமே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

ஒரு அணிக்கு நீங்கள் ஆலோசகராக நியமிக்கப்பட்டால் அதற்காக நீங்கள் ஏதும் தனிப்பட்ட முறைகளைக் கையால்கிறீர்களா?  

            ஆம், முதலில் நான் வீரர்களைப் பற்றி கற்றுக்கொள்வேன். அதன் பின்பே அவர்களுக்கு ஏற்றால் போல் பயிற்சிகளை வழங்குவேன். ஒவ்வொரு வீரரையும் தனித்தனியாகவே கையாள்வேன். அனால், துரதிஷ்டவசமாக இதற்காக எனக்கு கிடைக்கும் நேரம் மிகக்குறைவு. இதனால் வீரர்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. வீர்கள் போட்டியின் இடைநடுவில் அனுபவிக்கும் அழுத்தத்தினால் அவர்களின் வேறுபட்ட தன்மைகள் வெளிப்படும்.

இதனால் நான் ஏனைய பயிற்றுவிப்பாளர்களிடம் இருந்து ஒவ்வொரு வீரர் பற்றியும் அவர்களின் தன்மைகள், சுபாவங்கள் பற்றியும் தெரிந்து கொள்வேன். இதன் மூலம் அவர்களுக்கு எது பொருத்தமானது?, அவர்களை எவ்வாறு அணுகுவது? போன்ற விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.

கிரிக்கெட் ஒரு புறம் இருக்க வீரர்களின் தனிப்பட்ட விடயங்கள் பற்றி தெரிந்து கொள்வது எந்தளவு முக்கியமானது?

            வயது மட்டம் அதிகரிக்க இவ்விடயம் மிக முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை உயர்தர வீரர் ஒருவர் தனது விளையாட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அறிமுக வீரர் ஒருவரை நாம் நடத்தும் விதம், வழங்கும் அறிவுரை என்பன வித்தியாசமாக இருக்கும். எனவே ஒவ்வொரு வீரரும் வேறுபட்ட விதத்தில் கையாளப்பட வேண்டும். இதன் மூலம் அணிக்கும் நாட்டுக்கும் சிறந்ததை வழங்க முடியும் என நம்புகிறேன்.

ஒரு வீரர் மனநிலை ரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். ஒரு வீரர் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த உறுதியான மனநிலை 80% உம் திறமை 20% உம் தேவையாகும். உண்மையில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முன்னர் 3 அல்லது 4 நாட்கள் தொடர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். எனவே ஒட்டுமொத்தமாக 8 நாட்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். உறுதியான மனநிலை இருந்தால் மாத்திரமே இதனை செய்ய முடியும். தற்கால கிரிக்கெட் வீரர்கள் மேற்கொள்வதும் அப்படித்தான்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 இலங்கை வீரர்கள்

ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ்…

இலங்கை அணி சரிவிலிருந்து மீள வருவது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

            நான் எப்போதும் சொல்வது போலதான் கிரிக்கெட்டின் ஒவ்வொரு வகையிலும் ஒருவர் எங்கு தவறுகிறார் என்பதை முதலில் அறிய வேண்டும். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி, T-20 போட்டியாக இருந்தாலும் சரி, அடுத்த 2 வருடங்களுக்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்ற வீரர்களை முதலில் தெரிவு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களை சிறப்பாக கையாள வேண்டும், சிறப்பாக பயிற்சியளிக்க வேண்டும், அதன் பின்னர் அவர்கள் சிறப்பாக விளையாட காலம் வழங்க வேண்டும்.

இது பயிற்றுவிப்பாளரினதோ, அணித் தலைவரினதோ அல்லது நிர்வாகத்தினதோ தனிப்பட்ட பொறுப்பல்ல. அனைவரும் ஒன்று பட்டால் மாத்திரமே வெற்றி சாத்தியமாகும். ஒரு போட்டியில் ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் சிறப்பாக செயல்படும் போது அணி சிறப்பாக செயல்பட்டிருக்கும்.

இலங்கை அணியின் மிக கவலையான விடயம் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாக சோபிக்காததுதான். அது ஏன் என்று தெரியவில்லை. சிரேஷ்ட வீரர்களே இளம் வீரர்களை வழிகாட்ட வேண்டும் இதுவே நடைமுறையும் கூட. “மாற்றத்துக்குள்ளாகும் காலம்” இதனை இனியும் பாவிக்க முடியாது.

இலங்கை அணி நான் சொன்னது போல மீள சிந்திக்க வேண்டும். அதன் பின்னர் நன்கு திட்டமிட வேண்டும். உதாரணமாக அடுத்த 7 தொடர்களை வெளிநாடுகளில் நடாத்தக் கூடாது. அது மோசமான திட்டமாகும்.

இலங்கை அணி மாற்றத்துக்குள்ளாகும் காலத்தினை மிக அதிகமாக பாவிப்பதாகவே தெரிகிறது. இதற்கு காரணம் அடிமட்டத்திலுள்ள பிரச்சினை என்று நினைக்கிறீர்களா?

            ஆம். அடிமட்டத்திலேயே பிரச்சினை உள்ளது. பாடசாலை கிரிக்கெட் போட்டிகளும் சரி, முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளும் சரி அந்தளவு போட்டி மிக்கதாக இல்லை. உண்மையில் பாடசாலை மட்ட கிரிக்கெட் சிதைவடைந்துள்ளது.

உலகின் முதல் தரத்திலிருந்த பாடசாலை மட்ட கிரிக்கெட் இன்று உலகின் கீழ்மட்ட நிலைக்கு வந்துள்ளது. பாடசாலை கிரிக்கெட்டில் இருந்து எமக்கு தேவையான வெளியீடு சரியாக கிடைப்பதில்லை. தேசிய அணியில் இடம்பிடிக்கும் வீரர்களுக்கு அவர்களின் தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் கொண்டுவந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இது ஆரோக்கியமான விடயம் அல்ல.

எமது வீரர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் : இலங்கை கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அடுத்த மாதம்…

கடந்த சில காலமாக இலங்கை அணியில் உபாதைகள் மிக அதிகமாக உள்ளன. உடற்பயிற்சியில் உள்ள குறைபாடுதான் இதற்கு காரணம் என கருதுகிறீர்களா?

            ஒரு நீண்ட போட்டியில் விளையாட தேவையான உடல் வலிமையை எமது உடல் கொண்டிருப்பதில்லை. அதனை பெற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் கழக மாட்ட பயிற்சிகளின் போது ஒரு நாளைக்கு குறைந்தது 15 ஓவர்கள் பந்து வீசவில்லையாயின் அவர் டெஸ்ட் போட்டியொன்றில் 15 ஓவர்கள் பந்து வீசும்போது அவர்களது உடல் அதற்கு ஒத்துழைக்காது.

இலங்கை வீரர்கள் பலர் சிறந்த திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அனால் யாரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதில்லை. இதற்கான காரணம் என்ன?

            எனது கதவுகள் திறந்தே உள்ளன. யாருக்கும் வந்து என்னுடன் பேசலாம் ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. ஒரு தடவை சிறப்பான திறமையை வெளிப்படுத்தினால் எல்லா காலமும் அவ்வாறே இருக்க முடியும் என நினைக்க முடியாது. அனைவரும் கஷ்டமான காலங்களை கடந்ததுதான் ஆக வேண்டும்.

விராத் கோலியாக இருந்தால் கூட அப்படித்தான். அனால், அதனைக் கடக்க கடினமாக உழைக்க வேண்டும், பயிற்சி பெற வேண்டும். பொறுமையுடன் கடினமாக உழைத்தால், எந்த வித கடினமான காலங்களையும் கடக்க முடியும். அது கடினமாக உழைத்தால் மாத்திரமே.