FIFA உலகக் கிண்ண, ஆசியக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

160

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல்  காரணமாக 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கால்பந்து தொடர் ஆகிய இரண்டுக்குமான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளை பிற்போட்டுள்ளதாக பிஃபாவும், ஆசிய கால்பந்து சம்மேளனமும் இணைந்து அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. 

இனி வேண்டுமென்று இருமினாலும் சிவப்பு அட்டை

அந்தவகையில் இந்த ஆண்டின் நவம்பர், ஒக்டோபர் மாதங்களில் நடைபெற இருந்த இந்த தகுதிகாண் போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த தகுதிகாண் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் பங்குபற்றுவதனை அடுத்து குறித்த வீரர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டே தகுதிகாண் போட்டிகளை பிற்போடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிஃபா சம்மேளனம் தாம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. 

FIFA உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு

முன்னரும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இந்த தகுதிகாண் போட்டிகள் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நிலையில், தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக இந்த தகுதிகாண் போட்டிகள் பிற்போடப்படுவது மூன்றாவது தடவையாகும். 

அதேநேரம், பிற்போடப்பட்டிருக்கும் தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் பிஃபா மேலும் அறிவித்திருக்கின்றது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<