புளு ஸ்டார், அப் கண்ட்ரியை அதிரடியாக வென்ற ஜாவா லேன், மொரகஸ்முல்ல

Vantage FFSL President’s Cup 2020

385
FFSL
 

Vantage FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் B குழுவுக்காக இன்று (13) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ரினௌன் கழகத்திற்கு எதிரான போட்டியில் நியூ யங்ஸ் கால்பந்து கழகம் 3-2 என பரபரப்பு வெற்றியை பெற்றதோடு நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் மாத்தறை சிட்டி அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது. அதேபோன்று இன்று மாலை நடைபெற்ற A குழுவின் முக்கியமான போட்டியில் புளூ ஸ்டார் அணியை ஜாவா லேன் கழகம் 3-0 என என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்ததோடு மொரகஸ்முல்ல அணியிடம் அப் கன்ட்ரி லயன்ஸ் தோல்வியை சந்தித்தது. 

ஜாவா லேன் வி.. எதிர் புளூ ஸ்டார் வி.

குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே ஜாவா லேன் அணி இலகுவான கோல் ஒன்றை பெறும் வாய்ப்பை தவறவிட்டது. மொஹமட் அப்துல்லா லாவகமாக எதிரணி கோல் கம்பத்தை நோக்கி எடுத்து வந்த பந்தை கோலுக்கு மிக அருகில் வைத்து ப்ளூ ஸ்டார் கோல் காப்பாளர் தடுத்தார்

எனினும் 14 ஆவது நிமிடத்தில் நூமான் உயரப் பரிமாற்றிய பந்தை அப்துல்லா தலையால் முட்டி ஜவா லேன் அணிக்கு கோலாக மாற்றினார்

கிறிஸ்டல் பெலஸை போராடி வென்றது புளூ ஈகல்ஸ்

இந்நிலையில் இரண்டாவது பாதியிலும் ஜாவா லேன் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 53 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைக் கொண்டு மாலக்க பெரேரா ஜாவா லேன் அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட ஜாவா லேன் அணிக்காக தனியே பந்தை எதிரணி கோல் பகுதிக்கு எடுத்துச் சென்ற நவீன் ஜூட் 77 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு வெளியே வைத்து உதைந்து அபார கோல் ஒன்றை புகுத்தினார்.  

ஜவா லேன் இந்தத் தொடரின் முதல் போட்டியில் அப் கன்ட்ரி லயன்ஸ் அணியை சமன் செய்த நிலையில் அது தற்போது 4 புள்ளிகளுடன் உள்ளது. முதல் போட்டியில் மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த புளூ ஸ்டார் அணி A குழுவில் மூன்று புள்ளிகளுடன் உள்ளது.  

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் வி.. அப்துல்லா நஜீப்தீன் 14, மாலக பெரேரா 52 (பெனால்டி), நவீன் ஜூட் 77


மொரகஸ்முல்ல வி.. எதிர் அப் கன்ட்ரி லயன்ஸ் வி..

கொழும்பு சுகததாச மைதானத்தில் மின்னொளியின் கீழ் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக ஆடிய மொரகஸ்முல்ல அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டி தொடரில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. அந்த அணி தனது முதல் போட்டியில் புளூ ஸ்டாரிடம் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.  

10 வீரர்களுக்கு கொரோனா: பிரேசிலில் தடைப்பட்ட கால்பந்து போட்டி

போட்டியின் ஆரம்பத்திலேயே சக வீரர் உள்ளனுப்பிய பந்தை ஹெடர் செய்த எரந்த பிரசாத் மொரகஸ்முல்ல அணிக்காக கோல் ஒன்றை புகுத்தி முதல் பாதியில் அணியை முன்னிலை பெறச் செய்தார். 

இரண்டாம் பாதியில் போட்டியின் கடைசி நிமிடங்களில் டிலான் மதுசங்க, பந்தைத் தடுக்க வந்த அப் கண்ட்ரி லயன்ஸ் கோல் காப்பாளர் நிலன்க குமாரவின் கால்களுக்கு உள்ளால் பந்தை கடத்தி அடுத்த கோலைப் பெற்றார். 

ஹசித்த பிரியங்கர 4 நமிட இடைவெளியில் அடுத்த கோலையும் பெற, ஆட்ட நிறைவில் 3 கோல் வித்தியாசத்தில்  மொரகஸ்முல்ல அணி வெற்றி பெற்று, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

கோல் பெற்றவர்கள்

மொரகஸ்முல்ல வி.. – எரந்த பிரசாத் 07, டிலான் மதுசங்க 84, ஹசித்த பிரியங்கர 88

மஞ்சள் அட்டை பெற்றவர்நுவன் தரங்க 45       

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

ஜாவா லேன் எம். ரிஸ்கான் 47, மாலக  பெரேரா 71 

புளூ ஸ்டார் என்.எம். ரினாஸ் 37


நியூ யங்ஸ் கா.க. எதிர் ரினௌன் வி.க.    

குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் எதிரணி கோல் கம்பங்களை அடிக்கடி ஆக்கிரமித்தன. எனினும் 20 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கை பயன்படுத்தி தரிந்து தனுஷ்க சிறந்த ஒரு உதை மூலம் நியூ யங்ஸ் அணியை முன்னிலை பெறச் செய்தார். 

ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூ ஸ்டார்

எனினும் முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் ரினௌன் கழகத்திற்கு பெனால்டி பெட்டிக்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைக் கொண்டு ஜூட் சுமன் பதில் கோல் திருப்பினார்.

இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே புன்சர சேனநாயக்க கோல் ஒன்றை புகுத்தி நியூ யங்ஸை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் போட்டியின் கடைசி நேரத்தில் வைத்து மதுசங்க கருணாரத்னவின் கோல் மூலம் நியூ யங்ஸ் அணி 3-1 என முன்னிலை பெற்றது. 

போட்டியின் மேலதிக நேரத்தல் வைத்து ரினௌன் சார்பில் எம்.நிதர்சன் கோல் ஒன்றை புகுத்தியபோதும் அது அந்த அணியின் வெற்றிக்கு போதுமாக அமையவில்லை. 

கோல் பெற்றவர்கள்  

நியூ யங்கஸ் கா.க. – தரிந்து தனுஷ்க 20’, புன்சர சேனநாயக்க 47’, மதுசங்க கருணாரத்ன 52’

ரினௌன் வி.க. – ஜூட் சுமன் 44’, மரியதாஸ். நிதர்சன் 90+4

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

ரினௌன் வி.க. – ரூபன் ராஜ்  19’, ஓ. பிரான்சிஸ் 73’

FFSL தலைவர் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த புளூ ஸ்டார்


மாத்தறை சிட்டி கழகம் எதிர் நியூ ஸ்டார் வி.க. 

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடைசி வரை எந்த கோலும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இரு அணிகளும் எதிரணி கோல் பகுதியை பல தடவைகள் ஆக்கிரமித்தபோதும் அதனை கோலாக மாற்ற இரு அணிகளாலும் முடியாமல்போனது. 

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றபோதும் எந்த வீரரும் மஞ்சள் அட்டை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<