அமெரிக்காவில் வைத்து இலங்கை சாதனை படைத்த உஷான்

189

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலாத்தின் லுபொக்கில் நேற்று (21) நடைபெற்ற எல்.எஸ்.சி உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் களமிறங்கிய இலங்கையைச் சேர்ந்த உஷான் திவங்க பெரேரா, குறித்த போட்டியில் புதிய இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இலங்கையின் முன்னாள் கனிஷ் உயரம் பாய்தல் சம்பியனான ஷான், தற்போது அமெரிக்காவில் உயரம் பாய்தல் பயிற்சிகளுடன் டெக்சாஸில் உள்ள .எண்ட்.எம் வணிக பல்கலைக்கழகத்தில் மேலதிக கல்வியை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட Lone Star Conference உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 2.25 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.

கோலூன்றிப் பாய்தலில் ஒலிம்பிக் சம்பியனை வீழ்த்திய இலங்கை வம்சாவளி வீராங்கனை

இதன்படி, இலங்கை தேசிய உயரம் பாய்தல் சம்பியனான மஞ்சுள குமாரவினால் 2016இல் டோஹாவில் நடைபெற்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடரில் நிலைநாட்டப்பட்ட 2.24 மீற்றர் சாதனையை ஐந்து வருடங்களுக்குப் பிறகு உஷான் முறியடித்தார்

அத்துடன், குறித்த திறமை வெளிப்பாட்டின் காரணமாக ஷான் திவங்க, உள்ளக உயரம் பாய்தலில் தனது அதிசிறந்த உயரத்தையும், குறித்த போட்டித் தொடரின் சாதனையயும் முறியடித்து 2020-21 பருவகாலத்துக்கான உலக மெய்வல்லுனர் தரவரிசையில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 17ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்

ஆசியாவை பொறுத்தமட்டில் இந்த வருடத்தில் இதுவரை வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இந்தியாவின் தேஜேஸ்வன் சங்கருடன் முதலிடத்தையும் ஷான் திவங்க பகிர்நதுகொண்டுள்ளார்

60 மீற்றரில் உலகின் 3ஆவது வேகமான வீரரான யுபுன் அபேகோன்

இதனிடையே, இவ்வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விழாவுக்கான அடைவுமட்டமாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2.22 மீற்றர் உயரத்தைக் கடந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய உயர்திறன் குழாம் மற்றும் தேசிய மெய்வல்லனர் குழாத்திலும் அவர் இடம்பிடித்தார்

இந்த நிலையில், போட்டியின் பிறகு அருண பத்திரிகைக்கு ஷான் திவங்க வழங்கிய செவ்வியில்,

உண்மையில் இவ்வாறானதொரு திறமையை வெளிப்படுத்த எனக்கு உதவிய செய்த பயிற்சியாளர் ரொக் லைட்டுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தியாகமும், உற்சாகமும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது

அதேபோல, எனது பல்கலைக்கழகமும் எனக்கு நிறைய உதவி செய்தது. எனவே, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்குபற்றி எனது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாரிஸ்டெல்ல கல்லூரியின் பழைய மாணவரான 23 வயதுடைய ஷான் திவங்க, இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான புதிய திகதி அறிவிப்பு

இதனையடுத்து, இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனும், உயரம் பாய்தலில் ஆசிய தங்கப் பதக்கம் வென்றவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தின் வழிகாட்டலினால் புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு கடந்த வருடம் முதல் அமெரிக்காவில் உயரம் பாய்தலுக்கான மேலதிக பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் மஞ்சுள குமாரவின் இலங்கை சாதனையை ஷான் திவங்க, இந்த வருடத்தில் முறியடிப்பார் என அமெரிக்காவில் வசித்து வருகின்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்,
The Island ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

ஆண்களுக்கான உயரம் பாய்தல் தேசிய சாதனையை சுமார் 14 வருடங்களுக்கு முன் மஞ்சுள குமார நிலைநாட்டியதுடன், அதில் அவர் 2.21 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…