கார்கில்ஸ் புட் சிட்டி நடாத்தும் FA கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் நேற்றோடு முடிவடைந்தது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை முழுவதிலும் உள்ள மொத்தமாக 500 அணிகளுடன்  ஆரம்பமான கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பிரீமியர் கால்பந்து நொக்அவுட் போட்டித் தொடரான இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில்  இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் ரினொவ்ன் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

FA கிண்ண இறுதிப்போட்டி – ஒரு கண்ணோட்டம்

போட்டியின் முதல் பாதியின் முதல் 5 நிமிடங்களில் இராணுவ விளையாட்டுக் கழகம் போட்டியின் ஆதிக்கத்தை தம்பக்கம் வைத்து இருந்தது. ஆனால் அதன் பின் போட்டியின் முழு ஆதிக்கத்தை ரினொவ்ன் விளையாட்டுக் கழகம் பெற்று இருந்தது. அதன் பலனாக முஹமத் பசாலின் பாஸின் மூலம் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் முஹமத் ரிப்னாஸால் கோல் போடப்பட்டது. அதன் பின்பும் ஒரு சில கோல்கள் போடும் வாய்ப்பு ரினொவ்ன் விளையாட்டுக் கழகதிற்கு கிட்டினாலும் அவர்களது கோலை நோக்கிய குறி தவறியது. பின் போட்டியின் முதலாவது பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் சன்க தனுஷ்கவால் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் முதலாவது கோல் போடப்பட்டது. அந்த கோல் தொடர்பாக போட்டி நடுவரோடு முரண்பாட்டில் ஈடுபட்டமையால் ரினொவ்ன் விளையாட்டுக் கழக வீரரிற்கு சிவப்பு நிற அட்டை வழங்கப்பட்டது. இறுதியில் முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என்று சமநிலையில் காணப்பட்டது.

பின் இரண்டாவது பாதி தொடங்கியது.  ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தில் 10 வீரர்களே விளையாடினார்கள். இதன் முழு பலனை உபயோகித்த இராணுவ விளையாட்டுக் கழகம் இன்னுமொரு கோலை போட்டது. அந்த கோலை தனுஷ்கவால் இராணுவ விளையாட்டுக் கழகத்தின் 2ஆவது கோல் போடப்பட்டது. அந்த கோலை மிக அருமையான பாஸின் மூலம் முஹமத் இஸ்ஸடீன் போட்டார். அந்த கோலின் பின் ரினொவ்ன் விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடு மும்முரமாக இருந்தது. எப்படியாவது ஒரு கோலை போட்டு முதலில் போட்டியை சமநிலை படுத்த வேண்டும் என்ற நோக்கில் விளையாடியது. ஆனால் இறுதிவரை அவர்களது நோக்கம் சரி போகவில்லை. போட்டியின் இறுதி விசில் அடிக்க ஒரு சில வினாடிகளுக்கு முன் இராணுவ விளையாட்டுக் கழக வீரர் முஹமத் இஸ்ஸடீனால் 3ஆவது கோலும் போடப்பட்டது. இதன் மூலம் இந்த இறுதிப் போட்டியை  இராணுவ விளையாட்டுக் கழகம் 3-1 என்ற ரீதியில் வெற்றி கொண்டு 2016ஆம் ஆண்டுக்கான கார்கில்ஸ் புட் சிட்டி  FA கிண்ண சம்பியன் பட்டதை தன் வசப்படுத்தியது.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – முஹமத் இஸ்ஸடீன்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்