ICC இன் உறுப்புரிமையை இழந்த இலங்கை கிரிக்கெட்

Sri Lanka Cricket

615
Sri Lanka Cricket

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC) இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையினை உடனடி அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>ஐசிசியின் உயரிய விருதை பெறவுள்ள அரவிந்த டி சில்வா

இன்று இலங்கை கிரிக்கெட் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டமைப்பு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்கு ஒழுங்கமைந்து நடக்கவில்லை என குற்றம் சுமத்தியே அதன் முழு உறுப்புரிமையினையும் இரத்துச் செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகளே இந்த இரத்திற்கு காரணம் எனக்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் உறுப்புரிமை இரத்தினைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இந்த இரத்து தொடர்பிலான தொடர்பிலான நிபந்தனைகள் குறித்த அறிவிப்புக்களை ICC மூலம் காலக்கிரமத்தில் வெளியிடும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் சகீப் அல் ஹஸன்

அதேவேளை இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை அண்மையில் கலைக்கப்பட்டு அதற்கு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான தற்காலிக சபை ஒன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட தற்காலிக சபைக்கும் 14 நாட்களுக்கு செயற்பட தடை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<