இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இன்று வெள்ளிக்கிழமை (28) முடிவடைவந்த குழுநிலை போட்டிகள் முன்றும் சமநிலை கண்டன.

இதில் வட மாகாண அணி வட மத்திய மாகாணத்துடனான போட்டியில் மயிரிழையில் தோல்வியை தவிர்த்துக் கொண்டது. இதன்மூலம் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் வட மாகாணம் முதல் முறை அட்டம் ஒன்றை சமநிலையில் முடித்துக் கொண்டது. இதற்கு முந்தைய மூன்று குழுநிலை போட்டிகளிலும் வட மாகாணம் தோல்வியையே சந்தித்தது.

வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ்

ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் மந்தமாக ஆடியதால் எதிர்பார்த்தது போல் போட்டி சமநிலையில் முடிந்தது. வட மேல் மற்றும் மேல் மாகாண மத்திய அணிகளுக்கு இடையிலான போட்டியும் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.

வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்

கொழும்பு பிளும்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வட மாகாண அணி துடுப்பாட்டத்தில் சோபித்தபோதும் வட மத்திய மாகாணம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக அடியதால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

வட மாகாணம் தனது முதல் இன்னிங்ஸில் 190 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வட மத்திய மாகாணம் 55.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்று முன்னிலையை அடைந்தது. சன்தீப நிசன்சல ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றதோடு யொஹான் மெண்டிஸ் 63 ஓட்டங்களை பெற்றார்.

வட மாகாணத்திற்கு துடுப்பாட்டத்தில் அரைச்சதம் பெற்ற முஹமது அல்பர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வி. ஜதூஷனும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்களால் பின்தங்கிய வட மாகாண அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 45.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் வட மத்திய மாகாண அணிக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதன்போது வட மாகாண அணிக்காக துலாஜ் ரணதுங்க 74 ஓட்டங்களை பெற்றார். சதுரங்க அபேசிங்க 36 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வட மத்திய மாகாணம் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போதும் வெற்றி இலக்கை எட்ட இன்னும் 31 ஓட்டங்களே தேவைப்படும் நிலையில் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது.

மூன்றாவது நாள் முடிவில் இந்தியா வலுவான நிலையில்

ஆட்ட நேர முடிவின்போது வட மத்திய மாகாண அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்திருந்தது. அபாரமாக ஆடிய தினெத் ஹேவதன்திரி ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களை பெற்றார்.

பேட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (51.5) – முஹமது அல்பார் 82, வி. ஜதூஷன் 23, சன்தீப நிசன்சல 2/19, ஆகாஷ் செனரத்ன 5/65

வட மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) 235 (55.3) – யொஹான் மெண்டிஸ் 63, தினெத் ஹேவாதன்திரி 34, வி. ஜதூஷன் 3/40, முஹமது அல்பார் 3/54, சசித் லக்ஷான் 2/54, கே. கபிலராஜ் 2/62

வட மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 275/9d (49.3) – துலாஜ் ரணதுங்க 74, பராக்கிரம தென்னகோன் 42, .கே. டைரோன் 33, சதுரங்க அபேசிங்க 4/36, சன்தீப நிசன்சல 3/36

வட மத்திய மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 200/2 (38.5) – தினெத் ஹெவாதன்திரி 121*, யொஹான் மெண்டிஸ் 59, .கே. டைரோன் 2/64

போட்டி முடிவுசமநிலையில் முடிவு


 மேல் மாகாணம் மத்திய எதிர் வட மேல் மாகாணம்

கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வட மேல் மாகாணத்திற்கு எதிராக மேல் மாகாண மத்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்திரமாக துடுப்பெடுத்தாடியபோதும் அது வட மேல் மாகாண அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக போதிய வெளிச்சம் இல்லாமல் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை மேல் மாகாண மத்திய அணிக்கு பாதகமாக இருந்தது. இந்த போட்டி சமநிலையில் முடிந்த போதும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதற்கான புள்ளிகளை மேல் மாகாண மத்திய அணி பெற்றுக்கொண்டது.

மேல் மாகாண மத்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்ற நிலையில் வட மேல் மாகாண அணி முதல் இன்னிங்ஸில் 187 ஓட்டங்களுக்கே சுருண்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண மத்திய அணி சன்தீர சமரவிக்ரமவின் சதத்தால் (133), 283 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி வட மேல் மாகாணத்திற்கு போட்டியின் கடைசி தறுவாயில் 301 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தனது இரண்டாவது இன்னிஸை ஆடிய வட மேல் மாகாண அணி ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 204 (46.1) – ஹிமேஷ லியனகே 72, லஹிரு விமுக்தி 60, தரின்து ரத்னாயக்க 5/50, அசித்த பெர்னாண்டோ 3/52

வட மேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 187 (61.3) – சச்சின்த பீரிஸ் 51, ஜனித் லியனகே 4/64, டிஷக மனோஜ் 2/49

மேல் மாகாணம் மத்திய (இரண்டாவது இன்னிங்ஸ்) – 283 (71.3) – சதீர சமரவிக்ரம 133, மனெல்கர் டி சில்வா 33, தரிந்து ரத்னாயக்க 5/114, சசின் ஜயவர்தன 4/30  

வட மேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 42/2 (8) – லியோ பிரான்சிஸ்கோ 22*, விஷாத் ரன்திக்க 0/1

போட்டி முடிவு சமநிலையில் முடிவு

ஊவா மாகாணம் எதிர் தென் மாகாணம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ரஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நாளான இன்று தென் மாகாணம் தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி ஓட்டங்களை அதிகரித்துக் கொண்டது.

ஊவா மாகாணம் முதல் இன்னிங்ஸில் பெற்ற 198 ஓட்டங்களை கடப்பதற்கு டில்ஷான் டி சொய்ஸாவின் சதம் தென் மாகாண அணிக்கு கைகொடுத்தது. அந்த அணி 95 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இந்து 261 ஓட்டங்களை பெற்றது. சொய்சா சரியாக 100 ஓட்டங்களை பெற்றார். வேறு எந்த வீரரும் 35 ஓட்டங்களை தாண்டவில்லை.

இவன்க சன்ஜுல மற்றும் ஹர்ஷ ரஜபக்ஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 63 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஊவா மாகாண அணி கடைசி நாள் அட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஹர்ஷ ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை குவித்தார்

இதன்படி போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தென் மாகாண அணி அதற்கான புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 198 (76) – ஹர்ஷ ராஜபக்ஷ 88, மீதும் தினெத் 26, ரமேஷ் மெண்டிஸ் 4/53, சரித் அசலங்க 2/17

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 261 (95) –  டில்ஷான் டி சொய்ஸா 100, பசின்து இசிர 35, இவன்க சன்ஜுல 3/62, ஹர்ஷ ராஜபக்ஷ 3/39

ஊவா மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 128/4 (29) – ஹர்ஷ ரஜபக்ஷ 51*, யேஷான் விக்கிரமாரச்சி 36, சரித் அசலங்க 2/21

போட்டி முடிவு சமநிலையில் முடிவு