மூன்றாவது நாள் முடிவில் இந்தியா வலுவான நிலையில்

668
Sri Lanka Vs India Day 3

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ் போட்டியில், விராத் கோஹ்லி மற்றும் அபினவ் முகுந்தனின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுள்ள அதேவேளை   498 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையிலுள்ளது.

154 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 446 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில் மூன்றாவது நாளான இன்று துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி 78.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது.

54 ஓட்டங்களுடன் இன்றைய தினம் துடுப்பாட்டத்தை தொடர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 83 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரவீந்திர ஜடேஜா வீசிய பந்துக்கு டிரைவ் மூலம் பவுண்டரியொன்றை பெற முயன்ற போது ஷோர்ட் கவரில் களத் தடுப்பில் ஈடுப்பட்டிருந்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி உயரப் பாய்ந்து பிடித்த அபார பிடியெடுப்பொன்றின் மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

எமது பல திட்டங்கள் மோசமாக முடிந்தன – நுவன் பிரதீப்

இலங்கை அணித் தலைவர் ரங்கன ஹேரத், ரவீந்தர ஜடேஜாவின் பந்து வீச்சுக்கு ரிவேர்ஸ் ஸ்வீப் (Reverse Sweep) செய்ய முற்பட்ட போது, ஹேரத்தின் கையுறையில் உராய்ந்து விக்கெட் காப்பாளர் விர்த்திமன் சஹாவிடம் சென்றமையினால் மைதான நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். எனினும், அத்தீர்ப்பை ரங்கன ஹேரத், மைதான நடுவரிடம் மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டினார். அந்த வகையில் மீள்பரிசீலனை செய்த மூன்றாம் நடுவர் பந்து கையுறையில் உராய்ந்து செல்வதை உறுதி செய்ததால் ரங்கன ஹேரத் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து தில்ருவான் பெரேராவுடன் இணைந்து கொண்ட நுவன் பிரதீப் 8ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில், இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதேநேரம் அவ்விக்கெட்டின் மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது விக்கெட்டினை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, காயம் காரணமாக  அசேல குணரத்ன ஒய்வு (Retired) பெற்றுள்ளமையினால், இலங்கை அணி 9 விக்கெட்டுகளுடனேயே விளையாட வேண்டியுள்ள நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் களமிறங்கிய லஹிரு குமார வெறும் 2 ஓட்டங்களுடன் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணி சகல விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

அதேநேரம் இன்றைய தினம் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தில்ருவான் பெரேரா 38 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை ஜடேஜாவின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக களநடுவரினால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். எனினும், தில்ருவானின் ஆட்டமிழப்பு மீள்பரிசீலனை மூலம் பந்து விக்கெட்டுக்கு மேலாக செல்வது அவதானிக்கப்பட்டமையினால் மீண்டும் துடுப்பாடும் வாய்ப்பு தில்ருவான் பெரேராவுக்கு கிடைக்கப்பெற்றது.

மறுமுனையில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருந்த நிலையில், அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தில்ருவான் பெரேரா ஆட்டமிழக்காமல் 132 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 92 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதிலும் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமையினால் துரதிஷ்டவசமாக 8 ஓட்டங்களால் கன்னிச் சதத்தினை தவறவிட்டார்.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 67 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.

வட மத்திய மாகாண அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜதுசன் மற்றும் கபில்ராஜ

அதனையடுத்து 309 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. ஆரம்பம் முதலே அதிரடி மூலம் வேகமாக ஓட்டங்களை குவிக்க முயன்ற ஷிக்கர் தவான் மூன்று பண்டரிகள் உட்பட 14 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் தனுஷ்க குணாதிலகவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து, இந்திய அணி 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், லஹிரு குமராவின் பந்து வீச்சில் செதேஷ்வர் புஜாராவினால் கிடைக்கப்பெற்ற கடினமான பிடியொன்றை குசல் மெண்டிஸ் பாய்ந்து பிடியெடுத்ததால்  எதிர்பாராத விதமாக புஜாரா களத்திலிருந்து வெளியேறிய நேரிட்டது. அந்த விக்கெட்டைத் தொடர்ந்து மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.

சற்று நேரத்துக்கு பின்னர் போட்டி ஆரம்பித்த நிலையில், களமிறங்கிய அபினவ் முகந்த் மற்றும் அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமைத்திருந்த இந்த இணைப்பாட்டதை இன்றைய நாள் இறுதி ஓவரை வீசிய தனுஷ்க குணாதிலக்க, 81 ஓட்டங்களை பெற்றிருந்த அபினவ் முகுந்தனின் விக்கெட்டினை  LBW முறையில் வீழ்த்தியதன் ஊடாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதேநேரம் இன்றைய தினம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 114 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 76 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா, லஹிரு பெரேரா மற்றும் இறுதி ஓவரை வீசிய தனுஷ்க குணாதிலக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நாளை போட்டியின் நான்காவது நாளாகும்,

ஸ்கோர் விபரம்

India - BattingToss: India
Shikhar Dhawanc Mathews b Pradeep190 (168)
Abhinav Mukundc Dickwella b Pradeep12 (26)
Chesteshwar Pujarac Dickwella b Pradeep153 (265)
Virat Kohlic Dickwella b Pradeep3 (8)
Ajinkya Rahanec Karunarathne b Kumara57 (130)
Ravinchandran Ashwinc Dickwella b Pradeep47 (60)
Wriddhiman Sahac Perera b Herath16 (32)
Hardik Pandyac De Silva (Sub) b Kumara50 (49)
Ravindra Jadejab Pradeep15 (24)
Mohammed Shamic Tharanga b Kumara30 (30
Umesh YadavNot Out11 (10)
TotalExtras (16)600 (133.1 overs)
Sri Lanka - BowlingOMRW
Nuwan Pradeep3121326
Lahiru Kumara25.131313
Dilruwan Perera3011300
Rangana Herath4061591
Danushka Gunathilaka70430
Sri Lanka - BattingToss: India
Dimuth KarunarathneLBW b Yadav2 (9)
Upul TharangaRun Out 64 (93)
Danushka Gunathilakac Dhawan b Shami16 (37)
Kusal Mendisc Dhawan b Shami0 (4)
Angelo Mathewsc Kohli b Jadeja 83 (130)
Niroshan Dickwellac Mukund b Ashwin8 (15)
Dilruwan PereraNot Out92 (132)
Rangana Herathc Rahane b Jadeja9 (13)
Nuwan Pradeepb Pandya10 (26)
Lahiru Kumarab Jadeja2 (12)
Asela GunaratneDNB
TotalExtras (5)291 (78.3 overs)
India - BowlingOMRW
Mohammed Shami122452
Umesh Yadav141781
Ravichandran Ashwin275841
Ravindra Jadeja22.33673
Hardik Pandya30131
India - BattingToss: India
Shikhar Dhawanc Gunathilaka b Perera14 (14)
Abhinav MukundLBW b Gunathilaka 81 (116)
Chesteshwar Pujarac Mendis b Kumara15 (35)
Virat KohliNot Out103 (136)
Ajinkya RahaneNot Out23 (18)
Ravinchandran Ashwin
Wriddhiman Saha
Hardik Pandya
Ravindra Jadeja
Mohammed Shami
Umesh Yadav
TotalExtras (4)240/3 (53 overs)
Sri Lanka - BowlingOMRW
Nuwan Pradeep122630
Dilruwan Perera150671
Lahiru Kumara121591
Rangana Herath90340
Danushka Gunathilaka50161