மென்டிஸ் சகோதரர்களின் சிறப்பாட்டத்தால் வலுவான நிலையில் ரிச்மன்ட் கல்லூரி

161

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான டிவிசன் 1 கிரிக்கெட் தொடரின் மேலும் 5 போட்டிகள் இன்று நடைபெற்றன. அவற்றில் 3 போட்டிகள் இன்று நிறைவுற்றதுடன், மேலும் இரண்டு போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

கொழும்பு இசிபதான கல்லூரி எதிரி கொழும்பு லும்பினி கல்லூரி

கொழும்பு BRC  மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.  

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதான கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன் படி அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக 68 ஓவர்களில்  சகல  விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்றது

இசிபதனவின் வலுவுக்கு வித்திட்ட அசேன் குணவர்தன

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும்…

தொடர்ந்து இன்றைய தமது இரண்டாம் நாளினைத் தொடர்ந்த லும்பினி கல்லூரி அணி  100 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக பூர்ண சந்தருவன் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் இசிபதன கல்லூரியின் மதுசிக சந்தருவன் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் லஹிரு டில்ஷான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தமது 2வது இன்னிங்சினைத் தொடர்ந்த இசிபதன கல்லூரி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. அவ்வணி சார்பாக சஞ்சுல பண்டார 36 ஓட்டங்களையும் லேசான் அமரசிங்ஹ 22 ஓட்டங்களையும் பெற்றனர்.       

போட்டியின் சுருக்கம்  

இசிபதான கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 183/10 (68) அசேன் குணவர்தன 84, இஷான் பெர்னாண்டோ 29, காலிக் அமத் 30, விமுக்தி குலதுங்க 4/57, கயசான் கருணாரத்ன 2/08

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 100/10 (41.5)  பூர்ண சந்தருவன் 24,  மதுசிக சந்தருவன் 5/20, லஹிரு டில்ஷான் 2/26  

இசிபதான கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 74/4 (33) சஞ்சுல பண்டார 36, லேசான் அமரசிங்ஹ 22, கவீன் பீரிஸ் – 2/30, விமுக்தி குலதுங்க – 2/34

முடிவு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு


மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று   ஆரம்பமான இப்போட்டி இன்று முடிவு தராத போட்டியாக நிறைவு பெற்றது.

ஆட்டத்தின்  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய ஆட்ட நேர முடிவு வரை  11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் நிபுன் லக்ஷான் 22  ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி – 36/4 (11) நிபுன் லக்ஷான் 3/22

முடிவு – முடிவு அற்ற போட்டி

மாஸ் யுனிச்செல்லா அணிக்கு மற்றுமொரு இலகு வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25 ஆவது…

குருநாகல் மலியதேவ கல்லூரி எதிர் கொழும்பு டி எஸ் சேனநாயக்க கல்லூரி

மலியதேவ கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி இன்று வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மலியதேவ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் வரை  தமது முதல் இன்னிங்ஸ்க்காக ஆடிய அவ்வணி விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணியின் சுபுன் சுமனரத்ன ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்றைய மழையின் பின்னர் போட்டி இன்று ஆரம்பமாக, மலியதேவ கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக சுபுன் சுமனரத்ன ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களை பெற்றதுடன் சாளுக அதபத்து 55 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் விகான் ஹெம்சர 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சினைத் தொடர்ந்த டி எஸ் சேனநாயக்க கல்லூரி அணி இன்றைய அட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக முதித்த லக்சன் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களைப் பெற்றதுடன், செரோன்  செனால் 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மலியதேவ கல்லூரியின் கவீன் பண்டார 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.         

போட்டியின் சுருக்கம்

குருநாகல் மலியதேவ கல்லூரி – 274/6d (72) சுபுன் சுமனரத்ன 154*, சாளுக அதபத்து 55. விகான் ஹெம்சர 3/88

டி எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 177/4 (33) முதித்த லக்சன் 60*, செரோன்  செனால் 32. கவீன் பண்டார 4/60

முடிவு வெற்றி தோல்வி இன்றி நிறைவு  

டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய விக்கெட்…

காலி சென் அலோசியஸ் கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை சென் அலோசியஸ் கல்லூரிக்கு வழங்கியது.

இதன்படி களமிறங்கிய சென் அலோசியஸ் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் ஹரீன் புத்தில 46 ஓட்டங்களையும் பசிந்து நாணயக்கார 32 ஓட்டங்களையும் கிம்ஹான அசிர்வதன 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

காலி சென் அலோசியஸ் கல்லூரி – 211/8 (50) ஹரீன் புத்தில 46, பசிந்து நாணயக்கார 32,   கிம்ஹான அசிர்வாதன 32


மாத்தறை சென் சேவாசியஸ் கல்லூரி எதிர் காலி ரிச்மன்ட் கல்லூரி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென் சேவாசியஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக 47.3 ஓவர்களில்  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றது.  

அவ்வணி சார்பாக ரிசிர லக்வின் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சந்துன் மென்டிஸ் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், அம்சி டி சில்வா 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், தனஞ்சய லக்சான் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மன்ட் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 32 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களையும் தவீஷ அபிஷேக் 58 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளதுடன் ஆதித்ய சிரிவர்தன 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். .

போட்டியின் சுருக்கம்

சென் சேவாசியஸ் கல்லூரி – 87/10 (47.3) ரிசிர லக்வின் 23,  சந்துன் மென்டிஸ் 5/32,  அம்சி டி சில்வா 2/15, தனஞ்சய லக்சான் 2/17

காலி ரிச்மன்ட் கல்லூரி – 195/3 (43) கமிந்து மென்டிஸ் 91*, தவீஷ அபிஷேக் 58*, ஆதித்ய சிரிவர்தன 32.