கமகேவின் சிறப்பாட்டத்தால் புனித ஜோசப் கல்லூரி சம்பியன்

163

லக்ஷான் கமகேவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் அஷைன் டானியலின் அபார பந்துவீச்சு மூலம் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட சிங்கர் டிவிஷன் – 1 இறுதிப் போட்டியில் புனித செபஸ்டியன் கல்லூரியை 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய புனித ஜோசப் கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

மல்ஷித்தின் அபார பந்துவீச்சினால் அலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு

கொழும்பு, BRC மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி ஆரம்ப விக்கெட்டுகளை குறைந்த ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. எனினும் மத்திய பின் வரிசையில் வந்த லக்ஷான் கமகே ஒருமுனையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்டங்களை அதிகரித்தார்.

இதன்போது கமபே 9 ஆவது விக்கெட்டுக்கு ஷெரான் பொன்சேகாவுடன் இணைந்து 88 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.  பொன்சேகா 51 பந்துகளில் 24 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் புனித ஜோசப் கல்லூரி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றது. இதில் சதத்தை 3 ஓட்டங்களால் தவறவிட்ட கமகே 66 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றார். இதில் அவர் 5 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார்.  

புனித செபஸ்டியன் கல்லூரி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அணித்தலைவர் ஜனிஷ்க பெரேரா 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

ஆரம்பமாகிறது ஆறு நாடுகள் மோதும் ரெட்புல் பல்கலைக்கழக T20

ரெட்புல்லின் அனுசரணையில் சர்வதேசத்தின் எட்டு சிறந்த பல்கலைக்கழக

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய மொரட்டுவை, புனித செபஸ்டியன் கல்லூரிக்காக ஆரம்ப வீரர் துனித் ஜயதுங்க நிதானமாக ஓட்டங்களை சேகரித்தபோதும் மறுமுறையில் இருந்த வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் புனித செபஸ்டியன் கல்லூரி 45.1 ஓவர்களில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

துனித் ஜயதுங்க 99 பந்துகளில் 68 ஓட்டங்களை குவித்தார். எனினும் புனித செபஸ்டியன் அணி வீரர்களுக்கு பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்த புனித ஜோசப் அணித்தலைவர் அஷைன் டானியல் 9.1 ஓவர்களில் வெறும் 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.    

ஒன்பது ஆண்டுகளின் பின்னரே புனித ஜோசப் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க