இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (16) நிறைவுக்கு வந்திருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.
டி20 சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் போன்ற இரு தொடர்களுக்காக இந்தியா சென்றுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இந்தோரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது.
மும்பை அணியில் மீண்டும் விளையாடவுள்ள லசித் மாலிங்க
2020ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலத்தையொட்டி, மும்பை…
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் என மொத்தமாக போட்டியில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம்வரும் மொஹமட் ஷமி முதல் முறையாக முதல் பத்து இடங்களுக்குள் புகுந்துள்ளார்.
46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொஹமட் ஷமி 173 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் தற்போது தரவரிசையில் 8 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (790) ஏழாவது நிலைக்கு வந்துள்ளார். மேலும் அணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் ஷர்மா 1 நிலை உயர்ந்து 20 ஆவது நிலையை அடைந்துள்ளார்.
இதேவேளை பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் அபூ ஜெயித் 257 தரவரிசை புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் 18 நிலைகள் உயர்ந்து 62 ஆவது நிலையை அடைந்துள்ளார்.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை
துடுப்பாட்டத்தில் இந்திய அணிக்கு தூணாக நின்று இரட்டை சதத்துடன் ஒரு இன்னிங்ஸில் மொத்தமாக 243 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மயங்க் அகர்வால் 691 தரவரிசை புள்ளிகளை பெற்று வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் 7 நிலைகள் உயர்ந்து 11 ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும் துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு ஒரு அரைச்சதத்துடன் போராடி மொத்தமாக 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் 5 நிலைகள் உயர்ந்து 30 ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்
சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19…
மேலும் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (571) 4 நிலைகள் உயர்ந்து 35 ஆவது நிலையை அடைந்துள்ள அதேவேளை, பங்களாதேஷின் லிட்டன் தாஸ் 6 நிலைகள் உயர்ந்து 394 தரவரிசை புள்ளிகளுடன் 86 ஆவது நிலையை அடைந்துள்ளார்.
இதேவேளை டெஸ்ட் சகலதுறை வீரர்களின் தரப்படுத்தலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு நிலை உயர்ந்து 318 தரவரிசை புள்ளிகளுடன் நான்காவது நிலைக்கு முன்னேறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<