முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிப்பு

England tour of India 2024

88
Uncapped Jurel picked for England Tests

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர்கொண்ட இந்திய குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய குழாத்தில் இளம் வீரர் துருவ் ஜூரல் விக்கெட் காப்பாளராக இணைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்டுவந்த இசான் கிஷன் அணியில் இணைக்கப்படவில்லை.  

>> ஆஸி.யை சந்திக்கும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், T20I குழாம் அறிவிப்பு

துருவ் ஜூரலுடன் டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளராக கே.எல்.ராஹுல் மற்றும் கே.எஸ். பாரத் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் மொஹமட் சமி உபாதையிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு, தென்னாபிரிக்க தொடரில் விளையாடிய ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர். இதில் பிரசித் கிருஷ்ணா அணியிலிருந்து உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் அணியின் தலைவர் ரோஹித் சர்மா, உப தலைவர் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோருடன் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி, சிரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் 25ம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை குழாம் 

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், யசஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹுல், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆவேஸ் கான் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<