தேசிய விளையாட்டு விழா: மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகள் ஒத்திவைப்பு

162
national sports - cover

கெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 46ஆவது தேசிய விளையாட்டு விழாவினையொட்டி நடைபெறவிருந்த மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான அனைத்துப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் விளையாட்டு உலகிலும் எதிரொலித்தது. இதனால் உலகளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.  

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளை.துறை ஊடகவியாலளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உதவிக்கரம் நீட்டுபவர்களின் வரிசையில் …

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வீரர்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகக் கூடாது என்பதற்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற தேசிய விளையாட்டு விழாவின் இவ்வருடத்துக்கான மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளை கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஐந்து கட்டங்களின் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இதன்படி, இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு 5,000 ரூபா உதவித் தொகை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்சியார்களுக்கு உதவ…

இதனிடையே, தற்போது நாட்டில் நிலவுகின்ற சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு கொழும்பைத் தவிர அநுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறவிருந்த தேசிய ரீதியிலான போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டுத்துறை பணிப்பாளர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டிருந்ததுடன், தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது கட்டத்தின் கீழ் நடைபெறவிருந்த போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாட்டின் ஒருசில மாவட்டங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா பெரும்பாலும் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 >>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<