அறிமுக வீரரை டெஸ்ட் அணித்தலைவராக மாற்றும் தென்னாபிரிக்கா

185

நியூசிலாந்து அணிக்கு எதிராக பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் 14 பேர் அடங்கிய தென்னாபிரிக்க அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவர்களைப் பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி அங்கே இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க வீரர்கள் குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவின் உள்ளூர் லீக் தொடரான SA20 தொடரின் இரண்டாவது பருவத்திற்கான போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர்கள் பலர் அதில் பங்கேற்கின்றனர். இதனால் முன்னணி வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டு இளம் அறிமுக வீரர்கள் பலருக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 7 அறிமுக வீரர்கள் தென்னாபிரிக்க டெஸ்ட் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். இதில் அறிமுக வீரர்களில் ஒருவரான நெயில் பிராண்ட் தென்னாபிரிக்காவின் அணித்தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

துடுப்பாட்ட சகலதுறைவீரரான நெயில் பிராண்ட் அண்மையில் மேற்கிந்திய தீவுகளின் A அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் தென்னாபிரிக்க A அணியினை தலைவராக வழிநடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தென்னாபிரிக்க குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் ஏனைய மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் குழாத்துடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்

இதேநேரம் தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் மூன்று வீரர்கள் மாத்திரமே நியூசிலாந்து தொடரில் ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம்

நெயில் பிராண்ட் (தலைவர்), டேவிட் பெடிங்கம், ருவான் டி ஸ்வார்ட், கிளைட் பொர்டியூன், சுபைய்ர் ஹம்ஷா, ஷெப்போ மொரேக்கி, மிஹ்லாலி பொங்வானா, டுவான்னே ஒலிவியர், டான் பாட்டேர்சென், கீகன் பீடர்சன், டேன் பியெட், றய்னாட் வான் டொன்டேர், ஷோன் வொன் போர்க், காயா ஷோன்டோ

டெஸ்ட் தொடர் அட்டவணை

பெப்ரவரி – 04-08 – முதல் டெஸ்ட் – மவுண்ட் மௌங்னாய்

பெப்ரவரி – 13-17 – இரண்டாவது டெஸ்ட் – ஹமில்டன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<