12 வருடங்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனட்கட்!

India tour of Bangladesh 2022

222

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் இணைக்கப்பட்டுள்ளார்.

உபாதைக்குள்ளாகியுள்ள மொஹம் சமிக்கு பதிலாக ஜெயதேவ் உடன்கட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

>> ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்

இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் அஷாரே தொடரில் ஜெயதேவ் உனட்கட் விளையாடிய சௌராஷ்ரா அணி கிண்ணத்தை வென்றிருந்தது. குறித்த இந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய இவர் 19 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஜெயதேவ் உனட்கட் இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் கடந்த 2010ம் ஆண்டு விளையாடியிருந்ததுடன், சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புகின்றார். அதன்படி, நீண்ட இடைவெளிகளுக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரராக மாறியுள்ளார்.

>> Abu Dhabi T10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்கள்!

இதற்கு முதல் இந்திய அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பார்த்திவ் படேல் 2008ம் ஆண்டுக்கு பின்னர் 2016ம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார். எனவே, குறித்த இந்த இடைவெளியை ஜெயதேவ் உனட்கட் தாண்டியுள்ளார்.

மொஹமட் சமி நீக்கப்பட்டுள்ள காரணத்தால் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது ஜெயதேவ் உனட்கட் இணைக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், உபாதைக்குள்ளாகியுள்ள ரோஹித் சர்மாவுக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் கே.ராஹுல் அணித்தலைவராக செயற்படவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<