வீரர்களைத் தொடர்ந்து IPL தொடரிலிருந்து விலகும் நடுவர்கள்

Indian Premier League - 2021

147
BCCI

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 தொடரில் இருந்து நடுவர்கள் இருவர் விலகுவதாக அறிவித்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகியிருக்கும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல், உயிரியல் பாதுகாப்பு வலய பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இம்முறை T20 போட்டியிலிருந்து ஐந்து வீரர்கள் விலகினர்.

இதில் அவுஸ்திரேலிய வீரர்களான அன்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், அடம் ஸம்பா ஆகியோர் தமது சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

IPL தொடரிலிருந்து விலகும் ரவிச்சந்திரன் அஸ்வின்!

அவ்வாறே இங்கிலாந்து வீரர் லையம் லிவிங்ஸ்டன் உயிரியல் பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் விலகினார். அத்துடன், இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் பாதியிலேயே விலகினார். 

இந்த நிலையில் IPL T20 போட்டியில் இருந்து இரண்டு நடுவர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த நிதின்மேனன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த போல் ரீபெல் ஆகியோர் IPL போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர்

இந்தூரில் வசித்து வரும் நிதின் மேனனின் மனைவிக்கும், தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் இவ்வாறு விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நடுவரான போல் ரீபெல் கொரோனா அச்சம் காரணமாக தனது நாட்டுக்கு திரும்ப IPL போட்டியில் இருந்து விலக முடிவு செய்தார்.

IPL இலிருந்து விலகினார் ஜொப்ரா ஆர்ச்சர்

எனினும், இந்திய விமானங்களை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளதால் போல் ரீபெல் தனது விலகல் தீர்மானத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரீபெல் கூறுகையில்,  

தோஹா வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தேன். ஆனால் அங்கிருந்து வரும் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவிலேயே தங்க வேண்டியதாயிற்று. முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன். நல்லவேலையாக நான் கொரோனா பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியேறவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போட்டி நடுவரான மனு நய்யர் IPL தொடரிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். அவருடைய தாயார் காலமானதால் அவர் IPLஇல் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் போட்டி நடுவராக செயல்பட்டார்

IPL தொடரிலிருந்து லியாம் லிவிங்ஸ்டன் திடீர் விலகல்

அஹமதாபாத் போட்டிகளுக்கு முன்னதாக அவர் மும்பை மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளுக்கு போட்டி நடுவராக பணியாறிருயிருந்தார்.

இதனிடையே, கொரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களுக்காக பல வீரர்கள் விலகியுள்ள நிலையில், IPL போட்டி தொடர்ந்து நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…