யூரோ 2020 அடுத்த சுற்றுக்கு பெல்ஜியம், நெதர்லாந்து தகுதி

UEFA EURO 2020

104

வியாழக்கிழமை (17) பெற்ற முடிவுகளுடன் தமது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அணிகள் யூரோ 2020 கால்பந்து தொடரின் 16 அணிகள் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 

வியாழக்கிழமை இடம்பெற்ற மற்றைய போட்டியில் உக்ரேன் அணி வடக்கு மசிடோனிய அணியை 2-1 என வீழ்த்தியது. 

உக்ரேன் எதிர் வடக்கு மசிடோனிய

ரோமானிய தேசிய அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலின் 29ஆவது நிமிடத்தில் Andriy Yarmolenko மூலம் கோல் பெற்ற உக்ரேன் அடுத்த 5 நிமிடங்களில் Roman Yaremchuk மூலம் அடுத்த கோலையும் பெற்று முதல் பாதியில் இரண்டு கோல்களால் முன்னிலை பெற்றது. 

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

எனினும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களில் Ezgjan Alioski வடக்கு மசிடோனிய அணிக்கான முதல் கோலைப் பெற்றார். எனினும், எஞ்சிய நிமிடங்களில் எந்த கோலும் பெறப்படாத நிலையில் ஆட்ட நிறைவில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் உக்ரேன் வெற்றி பெற்று குழு C யில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

முழு நேரம்: உக்ரேன் 2 – 1 வடக்கு மசிடோனிய

கோல் பெற்றவர்கள் 

உக்ரேன் – Andriy Yarmolenko 29’ Roman Yaremchuk 34’

டக்கு மசிடோனிய – Ezgjan Alioski 57’ 

டென்மார்க் எதிர் பெல்ஜியம்

டென்மார்க்கின் பார்கென் அரங்கில் இடம்பெற்ற இந்த மோதல் ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே Yussuf Poulsen டென்மார்க் அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்து உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி கொடுத்தது. 

எனினும் இரண்டாம் பாதியில் Thorgan Hazard பேல்ஜியம் அணிக்கான முதல் கோலைப் பெற்று போட்டியை சமநிலைப்படுத்தினார். தொடர்ந்து முதல் கோலுக்கான உதவியை வழங்கிய Kevin De Bruyne பெல்ஜியம் அணிக்கான முன்னிலை கோலைப் பெற்றுக் கொடுக்க, போட்டி நிறைவில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம் குழு B இல் இருந்து முதல் அணியாக தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது. 

முழு நேரம்: டென்மார்க் 1 – 2 பெல்ஜியம்

கோல் பெற்றவர்கள்   

டென்மார்க் – Yussuf Poulsen 2’  

பெல்ஜியம் – Thorgan Hazard 54’, Kevin De Bruyne 70’

 கால்பந்து உலகை கண்கலங்க வைத்த Christian Eriksen | Football Ulagam

நெதர்லாந்து எதிர் ஆஸ்திரியா 

நெதர்லாந்தின் Amsterdam அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில்  கிடைத்த பெனானல்டியை Memphis Depay கோலாக்கினார். தொடர்ந்து 67ஆவது நிமிடத்தில் Denzel Dumfries பெற்றுக் கொடுத்த கோலுடன் நெதர்லாந்து 2-0 என வெற்றி பெற்றது. 

தாம் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நெதர்லாந்து அணி யூரோ 2020 தொடரில் C குழுவில் இருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 

முழு நேரம்: நெதர்லாந்து 2 – 0ஆஸ்திரியா

கோல் பெற்றவர்கள்   

நெதர்லாந்து –  Memphis Depay 11’(P), Denzel Dumfries 67’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<