செப்டம்பரில் சர்வதேச கால்பந்து மீண்டும் ஆரம்பம் : UEFA தலைவர்

76
UEFA president Aleksander Ceferin
Getty Images

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UEFA) தலைவரான அலெக்சான்டர் செபரின், சர்வதேச கால்பந்து போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கால்பந்துடன் சேர்த்து உலகில் இடம்பெற்ற அனைத்து விளையாட்டுக்களும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.  

பார்சிலோனா பனிப் போர்: மெஸ்ஸியின் எதிர்காலம் என்ன?

ஸ்பெயினின் பிரபல பார்சிலோனா கழகத்திற்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்

இந்நிலையில் அலெக்சான்டர் செபரின் சர்வதேச கால்பந்து போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். 

தற்போது கழக மட்டத்திலான கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வாதப், பிரதிவாதங்கள் நடைபெற்று அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால், சர்வதேச கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பம் செய்வதும் மிகவும் கடினமாக இருக்குமென கருதப்படுகின்றது. எனினும், சர்வதேச கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிப்பது செப்டம்பரில் சாத்தியம் என ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் கருதுகின்றார். 

”நான் அவை (சர்வதேச கால்பந்து போட்டிகள்) செப்டம்பரில் (மீள) நடக்குமென கூறுகிறேன்.” என அவர் தெரிவித்தார்.  

சர்வதேச கால்பந்து போட்டிகள் மீள இடம்பெறுவது, ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களுக்கு நிதிரீதியாக இலாபம் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வாகும்.  

குறிப்பாக FA என அழைக்கப்படும் இங்கிலாந்தின் கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து போட்டிகள் மீண்டும் இடம்பெறுவது தொலைக்காட்சி உரிமம் மூலம் அதிக வருமானத்தினை ஈட்டிக்கொடுக்க கூடியதாக இருக்கும் என்பதால் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது. 

இங்கிலாந்தின் கால்பந்து அணி செப்டம்பர் மாதம் ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளை அவற்றின் சொந்த மைதானங்களில் வைத்தும், ஒக்டோபர் மாதம் பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளை தமது சொந்த மைதானத்தில் வைத்தும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் நாடுகளுக்கான கால்பந்து தொடரில் எதிர்கொள்வதற்கு ஏற்படாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ரொனால்டோக்களில் சிறந்தவர் யார்? : முன்னாள் வீரரின் கணிப்பு

பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ரொனால்டோ

மறுமுனையில், நாடுகளுக்கான ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத் தொடரின்  இறுதிப் போட்டி 2021ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. அதோடு, 2020 ஆம் ஆண்டுக்கான யூரோ கிண்ணத்தின் பிளே ஒப் சுற்று, 2020ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டி என்பனவும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, செப்டம்பர் மாதம் சர்வதேச கால்பந்து போட்டிகள் மீள ஆரம்பம் செய்யப்பட்டாலும் கால்பந்துக்கான சர்வதேச நாட்காட்டியில் ஒரு குழப்பம் உருவாகுவதற்கான நிலைமையும் காணப்படுகின்றது. 

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க