UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள்

610
Getty Images

உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.

UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்முண்டின் படைத்த சாதனையையே அந்த அணி முறியடித்தது.    

மென். யுனைடடின் சொந்த மைதானத்தில் அவ்வணியை வீழ்த்திய மென். சிடி

பிரீமியர் லீக் சுற்றுத் தொடரின்…

குழுநிலையில் வென்ற அணிகள் அல்லது இடம்பிடித்த அணிகள் முதல் கட்ட போட்டிகளில் இருந்து விலகி இருக்கும். இந்த போட்டிகள் பெப்ரவரி 13/14 மற்றும் 20/21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இரண்டாவது கட்டப் போட்டிகள் மார்ச் 6/7 மற்றும் 13/14 ஆம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் இன்று நடந்த அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறையிலான தேர்வின்படி ஜுவன்டஸ் முதல் கழகமாக டொட்டென்ஹாமை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. ரியல் மெட்ரிட் போன்ற அணிகளை வீழ்த்தி தனது குழுவில் முதல் இடத்தை பெற்ற பெரும் நம்பிக்கையுடனேயே டொட்டென்ஹாம் களமிறங்கவுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்ற ஜுவன்டஸ் கடந்த இறுதிப் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து ஆட முயற்சிக்கவுள்ளது.

தற்போது பிரீமியர் லீக்கில் முன்னணியில் உள்ள மன்செஸ்டர் சிட்டி கழகத்துடன் எப்.சி பாசல் ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் தோல்வியுறாமல் இந்த பருவத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வி அடைந்த அணியாக உள்ள மன்செஸ்டர் சிடி இந்த தொடரில் வெற்றி வாய்ப்பு கொண்ட அணியாக பார்க்கப்படுகிறது.    

லிவர்பூல் கால்பந்து கழகத்திற்கு எதிராக போட்டியிட, இரு முறை சம்பியனான எப்.சி. போர்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்பார்டக் மொஸ்க்வாவுடனான தனது குழுநிலை போட்டியின் கடைசி ஆட்டத்தில் லிவர்பூல் 7-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA…

செவில்லா எப்.சி. அணி மன்செஸ்டர் யுனைடெட்டை எதிர்கொள்ளவுள்ளது. மன்செஸ்டர் யுனைடெட் தனது குழுநிலை போட்டியில் எப்.சி. பாசல் அணியிடம் தோற்றபோதும் அந்த அணியின் போல் பொபா, டேவிட் டி கீ மற்றும் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் போன்ற வீரர்கள் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு அணிக்கு திரும்பும்போது அந்த அணி உறுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

12 தடவைகள் சம்பியனான ரியல் மெட்ரிட் அணி, PSG அணியை எதிர்கொள்ளவுள்ளதால் இது ஒரு பிரமாண்ட போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரொனால்டோ மற்றும் நெய்மர் போன்ற வீரர்கள் எதிரெதிரே மோதும்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். ரியல் மெட்ரிட் தனது குழுவில் இரண்டாம் இடத்தையே பெற்றது. ஆனால் PSG குழுநிலை போட்டிகளில் அதிக கோல் சாதனையை முறியடித்திருப்பது ரியல் மெட்ரிட்டுக்கு சவாலாக இருக்கக் கூடும்.  

குழு நிலை போட்டிகளில் செல்சி மற்றும் அட்லெடிகோ மெட்ரிட் அணிகளை வீழ்த்தி தனது குழுவில் முதலிடத்தை பிடித்த ஏ.எஸ் ரோமா அணியை எப்.சி. ஷக்டார் டொனெட்ஸ்க் எதிர்கொள்ளவுள்ளது.  

செல்சி எப்.சி. அணி பார்சிலோனாவை எதிர்கொள்ளவுள்ளது. பாரிசிலோனா இந்த பருவத்தில் குழு நிலைகளில் எந்தவொரு தோல்வியையும் எதிர்கொள்ளாத நிலையிலும் செல்சி ஆறு போட்டிகளில் 16 கோல்களை புகுத்தியிருக்கும் நிலையிலும் இந்த போட்டி அதிக அவதானத்தை பெற்றுள்ளது.

பெசிக்டாஸ் மற்றும் பயெர்ன் முனிச் அணிகள் ஒன்றை ஒன்றை எதிர்கொள்ளவுள்ளன. இரு அணிகளும் சரிசமமானவை என பார்க்கப்பட்டபோதும் பெசிக்டாஸ் தோல்வியுறாத அணியாக குழுநிலை போட்டிகளை கடந்து வந்திருக்கும் நிலையில் இந்த போட்டி பற்றி எதிர்வுகூற முடியாததாக உள்ளது.