பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோமா அரையிறுதிக்கு தகுதி

328
Image Source - Getty image

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியைத் தமதாக்கிய இத்தாலியின் ரோமா அணி, எவரும் எதிர்பார்க்காத வகையில் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, மீண்டும் ஒருமுறை மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்திய லவர்பூல் அணியும் அரையிறுதியில் நெருக்கடி இன்றி இடம்பிடித்தது.

அரையிறுதிக்கான பிரகாசமான வெற்றி வாய்ப்புடன் இரண்டாம் கட்ட காலிறுதியில் களமிறங்கிய பார்சிலோனா எந்த ஒரு கோலையும் போடாத நிலையில், ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய ரோமா அணி 3 கோல்களை போட்டு வெற்றியீட்டியது.

அரையிறுதிக்கான பிரகாச வாய்ப்புடன் பார்சிலோனா, லிவர்பூல் அணிகள்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல்கட்ட..

முதல்கட்ட காலிறுதியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் 4-4 என்று மொத்த கோல்கள் சமநிலையானபோதும், ரோமா அணி எதிரணியின் மைதானத்தில் ஒரு கோலை போட்டிருந்ததால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

மறுபுறம் லிவர்பூல் அணி இரண்டாவது கட்ட காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றதன் மூலம் 5-1 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் மன்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி இலகுவாக அரையிறுதிக்கு முன்னேறியது.

பார்சிலோனா எதிர் ரோமா

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ரோமா அணியின் சொந்த மைதானமாக ஒலிம்பிக்கோ அரங்கில் நேற்று (11) நடைபெற்ற போட்டியில் ரோமா அணியின் ஆக்கிரமிப்பு அட்டத்தை ஸ்பெயின் சம்பியனான பார்சிலோனா எதிர்பார்க்கவில்லை.  

போட்டி ஆரம்பித்தது தொடக்கம் பந்தை வேகமாக பரிமாற்றிய ரோமா, மெஸ்ஸி மற்றும் சுவாரெஸ் ஆகியோர் தமது கோல்கம்பத்தை முற்றுகையிடுவதை தவிர்த்து ஆடியது. என்றாலும் போட்டி ஆரம்பித்து 4 ஆவது நிமிடத்தில் கோல்பெறும் முயற்சியாக மெஸ்ஸி பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து பந்தை இடதுகாலால் உதைக்க அது கோல் கம்பத்திற்கு வெளியால் உயரப் பறந்து சென்றது.

இரண்டு நிமிடங்களில் ஓப் சைட் பிடிக்கும் பொறியை முறியடித்த ரோமா முன்கள வீரர் எடின் டிசெகோ முன்னேறி, டானியல் டி ரொஸ் பரிமாற்றி பந்தை பெற்று ஆறாவது நிமிடத்திலேயே அதனை கோலாக மாற்றினார். இதனால், அரங்கில் குழுமியிருந்த 56,000க்கும் அதிகமான ரசிகர்களில் ரோமா அணி ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்தது.  

புதுமுக வீரர்களுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை..

பார்சிலோனா அணிக்கு அடுத்தடுத்து பிரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதும் ஒன்று கூட கோலாக மாறவில்லை. இதனால், முதல் பாதியில் பார்சிலோனா அணியின் பதில் கோல் புகுத்தும் தொடர் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

என்றாலும் ரோமா அணி தனது சொந்த மைதானத்தில் வலுவான அணியாகவே செயற்பட்டு வருகிறது. சம்பியன்ஸ் லீக்கின் இந்த பருவத்தில் ஒலிம்பிக்கோ அரங்கில் நடந்த ஐந்து போட்டிகளிலும் அவ்வணி வெற்றியீட்டியுள்ளமை நேற்றைய போட்டியிலும் அவர்களுக்கு பெரும் பலமாக இருந்தது.

முதல் பாதி: பார்சிலோனா 0 – 1 ரோமா

பின்னர், போட்டியின் 58ஆவது நிமிடத்தில் ரோமா அணியின் எடின் டிசெகோ கோலை நோக்கி பந்தை கடத்தி வந்தபோது, பார்சிலோனா பெனால்டி எல்லையில் அவ்வணியின் கெரராட் பிக்கு இடைமறித்து தவறிழைத்ததால் ரோமா அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட அணித்தலைவர் டி ரொஸ்ஸி, ரோமா அணிக்கு இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

இந்த கோலோடு போட்டி உத்வேகம் பெற்றது. ரோமா அணி மற்றொரு கோலை புகுத்தினால் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் பார்சிலோனா அணி சற்று தடுப்பு அட்டத்திற்கு திரும்பியது.

இந்நிலையில் போட்டி முடியும் தருவாயில் ரோமாவினால் பார்சிலோனா அணிக்கு அதிர்ச்சி கொடுக்க முடிந்தது. கென்கிஸ் உண்டர் கோணர் திசையில் இருந்து பந்தை உதைக்கும்போது கொஸ்டாஸ் மனோலஸ் அதிர்ச்சி தரும் வகையில் அதனை தலையால் முட்டி கோலாக மாற்றினார். 82ஆவது நிமிடத்தில் புகுத்தப்பட்ட அந்த கோல் ரோமா அணி அரையிறுதியை உறுதி செய்யும் கோலாக மாறியது.  

இதனைத் தொடர்ந்து இறுதி விசில் கஉதப்பட்டபோது அரங்கில் குழுமியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் கரகோசமிட்டதோடு, ரோமா வீரர்கள் மைதானத்தில் ஒருவர் மேல் ஒருவர் பாய்ந்து மலைபோல் தமது வெற்றியை கொண்டாடினர்.

ரோமா அணி 1984ஆம் ஆண்டுக்கு பின்னரே சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு முதல்முறை முன்னேறியுள்ளது. எனினும் இதன் முதல் காலிறுதியில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல்ள் வித்தியாசத்தில் வென்றபோதும் அதில் ரோமா இரண்டு ஓன் கோல்களை புகுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து முறை சம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்ற பார்சிலோனா அணி காலிறுதியில் தொடர்ச்சியாக வெளியேறும் மூன்றாவது தடவை இதுவாகும். கடந்த பருவத்தில் அந்த அணி ஜுவான்டஸிடம் தோற்றதோடு, 2016இல் அட்லெடிகோ மட்ரிட்டிடம் தோல்வியை சந்தித்தது.

முழு நேரம்பார்சிலோனா 0 – 3 ரோமா

கோல் பெற்றவர்கள்

ரோமா – டிசெகோ 6′, டி ரொஸ்ஸி (58 பெனால்டி), மனோலஸ் 82′


லிவர்பூல் எதிர் மன்செஸ்டர் சிட்டி

இரு இங்கிலாந்து கழகங்கள் மோதிய இரண்டாம் கட்ட அரையிறுதியில் முஹமது சலாஹ் மீண்டும் ஒருமுறை ஆதிக்கம் செலுத்தியதால் லிவர்பூல் அணிக்கு இலகுவாக அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

மன்செஸ்டர் சிட்டி அரங்கில் நடந்த இப்போட்டியில் மன்செஸ்டர் சிட்டி கோல் ஒன்றை புகுத்துவதில் ஆரம்பம் தொட்டு அவசரம் காட்டியது. முதல் நிமிடத்தில் மன்செஸ்டர் வீரர் டி ப்ருய்னே பிரீ கிக் ஒன்றை உதைத்தபோதும் அது கோலாக மாறவில்லை.

ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட..

அடுத்த நிமிடமே ரஹீம் ஸ்டெர்லிங்கின் உதவியோடு கப்ரியல் ஜேஸுஸ், மன்செஸ்டர் அணிக்காக கோல் ஒன்றை பெற்றமையினால் அந்த அணிக்கு நம்பிக்கை பிறந்தது. இதனைத் தொடர்ந்து மன்செஸ்டர் அணி முதல் பாதியில் ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியபோது லிவர்பூல் தனது மொத்த கோல் வித்தியாசத்தை தக்கவைத்துக் கொள்ள தற்காப்பு பாணியில் ஆடியது. இதனால் முதல் பாதியில் மன்செஸ்டர் அணியால் முன்னிலை பெற முடிந்தது.  

முதல் பாதிலிவர்பூல் 0 – 1 மன்செஸ்டர் சிட்டி

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழித்து லிவர்பூல் வீரர்கள் அபாரமாக கடத்தி வந்த பந்தை கோல் எல்லையில் வைத்து பெற்ற முஹமது சலாஹ் தனது இடது காலால் பந்தை உதைத்து பதில் கோலை போட்டார். இது எகிப்து நாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய சலாஹ் இந்த பருவத்தில் போட்ட 39ஆவது கோலாகும்.

இதனைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் கை ஓங்கியது. 77ஆவது நிமிடத்தில் ரொபார்டோ பிர்மினோ லிவர்பூல் அணிக்காக மற்றொரு கோலை புகுத்தி இரண்டாவது கட்ட காலிறுதியிலும் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி முடிவில் லவர்பூல் அணி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  

வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்வு..

இதன்மூலம் லிவர்பூல் அணி கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. எனினும் அந்த அணி ஐரோப்பிய கிண்ணம் அல்லது சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 10ஆவது தடவை இதுவாகும். மன்செஸ்டர் யுனைடட் (12) மாத்திரமே இதனை விடவும் அதிக முறை அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே இங்கிலாந்து அணியாகும்.

அதேபோன்று, லிவர்பூல் அணியினால் மாத்திரமே ஒற்றை பருவத்தில் மன்செஸ்டர் சிட்டியை மூன்று முறை வீழ்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

முழு நேரம்லிவர்பூல் 2 – 1 மன்செஸ்டர் சிட்டி

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் – சலாஹ் 56′, பிர்மினோ 77′

மன்செஸ்டர் சிட்டி – ஜேஸுஸ் 2′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<