ஜோன் கீல்ஸ் அணியின் வலுவான துடுப்பாட்டம் மழையால் வீணானது

115

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair and Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரில் இன்று (03) நடைபெற்ற ஜோன் கீல்ஸ் மற்றும் எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுசெய்யப்பட்டது.

மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டம் நிறைவுக்கு வரும் முன்னர் மழைக் குறுக்கிட்டதால் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் அணி, களத்தடுப்பை தேர்வுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணி சஷ்ரிக புஸெகொல்லவின் அரைச்சதம் மற்றும் மலிந்து மதுரங்க, அஷேன் சில்வா ஆகியோரின் சிறந்த ஓட்ட இணைப்பாட்டங்களின் உதவியுடன் 44.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும் போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டிருந்தது.

வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான டி-20 லீக் சம்பியனான மாஸ் யுனிச்செல்லா

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 26 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டி-20 நொக்-அவுட் தொடரின் இறுதிப் போட்டியில்…

சிறப்பாக துடுப்பாடிய சஷ்ரிக புஸெகொல்ல ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மலிந்து மதுரங்க 46 ஓட்டங்களையும், அஷேன் சில்வா 46 ஓட்டங்களையும், அஷான் பீரிஸ் 32 ஓட்டங்களையும், ரொஸ்கோ தட்டில் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் சார்பில் பந்து வீச்சில் அயன சிறிவர்தன 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும், போட்டியை நடுவர்கள் மீண்டும் தொடர்வதற்கு எதிர்பார்த்த போதிலும், தொடர்ந்தும் மழை குறுக்கிட்டதால் போட்டி வெற்றிதோல்வியின்றி நிறைவுசெய்யப்பட்டது.

போட்டி சுருக்கம்

ஜோன் கீல்ஸ் B – 245/5 (44.2) – சஷ்ரிக புஸெகொல்ல 55*, மலிந்து மதுரங்க 46, அஷேன் சில்வா 46, அஷான் பீரிஸ் 32, ரொஸ்கோ தட்டில் 36, அயன சிறிவர்தன 40/2

எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் – துடுப்பெடுத்தாடவில்லை

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<