இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் லக்ஷ்மன்!

India tour of New Zealand 2022

220

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி T20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இவ்வாறான நிலையில், T20 உலகக்கிண்ணத்தில் பணியாற்றியிருந்த பயிற்றுவிப்பாளர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

>> சங்கக்காரவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

அதன்படி இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் நியூசிலாந்து தொடரில் அணியுடன் இணையமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விவிஎஸ் லக்ஷ்மன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சாய்ராஜ் பஹுதலே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

>> T20 உலகக்கிண்ணத் தோல்வியின் பின்னர் இலங்கை அணியில் மாற்றம்?

விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருவதுடன், இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். அதுமாத்திரமின்றி இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இவர் அணியை வழிநடத்தியிருந்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<