புனித பத்திரிசியார் கல்லூரியை இலகுவாக வீழ்த்திய இப்பாகமுவ மத்தியக் கல்லூரி

U19 Schools Cricket Tournament 2022/23

78

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற இப்பாகமுவ மத்தியக் கல்லூரிக்கு எதிரான போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

குருணாகல் கொகரெல்ல மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இப்பாகமுவ மத்தியக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை புனித பத்திரிசியார் கல்லூரிக்கு வழங்கியது.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அபார வெற்றி ; பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு தோல்வி

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி அணியானது, சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்பை வெளிப்படுத்த தவறியதுடன், தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் சீறான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

புனித பத்திரிசியார் கல்லூரி அணியை பொருத்தவரை அதிகபட்சமாக எம். சௌதஜன் 19 ஓட்டங்களையும், ஏ.அபிஷேக் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள 33.4 ஓவர்கள் நிறைவில் 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் மனுஜ விஜேரத்ன 4 விக்கெட்டுகளையும், தினெத் விக்ரமாராச்சி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இப்பாகமுவ மத்தியக் கல்லூரிக்கு ஆரம்பத்தில், புனித பத்திரிசியார் கல்லூரி அணி பந்துவீச்சில் அச்சுறுத்தலை கொடுத்தது.

இப்பாகமுவ மத்தியக் கல்லூரியின் முதல் 2 விக்கெட்டுகளும் 18 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. எனினும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் மதுஷ நாணயகார மற்றும் பசிந்து பலிபன ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

மதுஷ நாணயகார 39 ஓட்டங்களையும், பசிந்து பலிபன 32 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற, 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த இப்பாகமுவ மத்தியக் கல்லூரி 24.4 ஓவர்கள் நிறைவில் 94 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்தது. பந்துவீச்சில் எஸ். சமிந்தன் மற்றும் எம். சௌதஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

  • புனித பத்திரிசியார் கல்லூரி – 90/10 (33.4), எம்.சௌதஜன் 19, ஏ. அபிஷேக் 17, மனுஜ விஜேரத்ன 14/4, தினெத் விக்ரமாராச்சி 3/2
  • இப்பாகமுவ மத்தியக் கல்லூரி – 94/2 (24.4), மதுஷ நாணயகார 39, பசிந்து பலிபன 32, எம்.சௌதஜன் 19/1, எஸ். சமிந்தன் 23/1
  • முடிவு – இப்பாகமுவ மத்தியக் கல்லூரி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<