சகலதுறைகளிலும் பெனடிக்ட் கல்லூரிக்காக அசத்திய மஹேஷ் தீக்ஷன

65

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (05) மூன்று போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

திரித்துவ கல்லூரி, கண்டி எதிர் மொரட்டு மஹா வித்தியாலயம்

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் எதிரணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த திரித்துவ கல்லூரி வீரர்கள் தமது முதல் இன்னிங்சில் A. செனதீர மற்றும் H. ஜயசூரிய ஆகியோரின் அரைச்சத உதவியுடன் 262 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது தமது ஆட்டத்தினை நிறுத்தியிருந்தனர். மொரட்டு மஹா வித்தியாலய அணி சார்பாக செஹத டி சொய்ஸா 5 விக்கெட்டுக்களை சாய்த்திருரந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பித்துக்கொண்ட ஸாஹிரா கல்லூரி

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு…

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சினை தொடங்கிய மொரட்டு அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடையும் போது 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

திரித்துவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 262/9d (63.2) A. செனதீர 53, H. ஜயசூரிய 50, செஹத டி சொய்ஸா 5/56

மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 53/3 (26)


புனித ஜோசப் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

ஜோசப் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய புனித ஜோசப் கல்லூரி 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி  வீரர் ரேவான் கெல்லி (182) மற்றும் நிபுன் சுமனசிங்க (156*) ஆகியோரின் அபார சதங்களின் உதவியோடு முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 393 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த தமது ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

இந்த இமலாய மொத்த ஓட்டங்களை தாண்ட தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த வெஸ்லி வீரர்கள் போட்டியின் முதல் நாள் முடிவடையும் போது விக்கெட் இழப்பு ஏதுமின்றி 72 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 393/2d (75.5) ரேவான் கெல்லி 182, நிப்புன் சுமனசிங்க 156*

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 72/0 (21)


தர்மசோக கல்லூரி, காலி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு

பெனடிக்ட் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பெனடிக்ட் கல்லூரி அணி தமது விருந்தினர்களை துடுப்பாட பணித்தது.

இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

அவுஸ்திரேலிய அணியின் பிரபல…

இதன்படி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தர்மசோக கல்லூரி அணி சோகமான முறையில் 86 ஓட்டங்களுடன் சுருண்டது. பெனடிக்ட் கல்லூரியின் சார்பாக மஹேஷ் தீக்ஷன வெறும் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த பெனடிக்ட் கல்லூரி அணிக்கு முன்னர் பந்து வீச்சில் அசத்திய மஹேஷ் தீக்ஷன துடுப்பாட்டத்திலும் கைகொடுக்க முதல் நாள் ஆட்ட முடிவில் அவ் அணி 201 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது. மஹேஷ் தீக்ஷன அபார சதம் (106*) ஓன்றுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 86 (41.4) மஹேஷ் தீக்ஷன 5/19

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 201/5 (52) மஹேஷ் தீக்ஷன 106*, றயான் செலிசிங்க 45, கவிந்து நதீஷன் 2/32

இந்தப் போட்டிகள் அனைத்தினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்