சகலதுறை ஆட்டத்தால் புனித தோமியர் அணிக்கு இலகு வெற்றி

37

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் தொடரின் பத்து போட்டிகள் இன்று (21) நிறைவுற்றன. இதில் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டதோடு மேலும் ஐந்து போட்டிகள் மழைக்கு மத்தியில் சமநிலையில் முடிவுற்றன. எஞ்சிய இரண்டு போட்டிகளின் விபரம் வருமாறு.

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை எதிர் தேவபத்திராஜா கல்லூரி, ரத்கம

மாத்தறை, உயன்வத்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சோபித்த புனித தோமியர் கல்லூரி 197 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கமகேவின் சிறப்பாட்டத்தால் புனித ஜோசப் கல்லூரி சம்பியன்

லக்ஷான் கமகேவின் அதிரடி துடுப்பாட்டம்…

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரிக்கு கிசந்திக்க ஜயவீர ஆட்டமிழக்காது பெற்ற 111 ஓட்டங்கள் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றது.

தேவபத்திராஜா கல்லூரி தமது முதல் இன்னிங்ஸிற்காக 103 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய மாத்தறை வீரர்கள் 4 விக்கெட்டுக்கைள இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது ஆட்டத்தை இடைநிறுத்தினர்.

இதன்மூலம் அந்த அணி தேவபத்திராஜா கல்லூரிக்கு 268 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

எனினும் தேவபத்திராஜா கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 71 ஓட்டங்களுக்கே சுருண்டது. அபாரமாக பந்துவீசிய புனித தோமியர் கல்லூரியின் சச்சிர ரஷ்மிக்க 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 278/7d (89) – கிசந்திக்க ஜயவீர 111*, மிஹிசல் அமோத 77, இருஷ்க திமிர 3/106

தேவபத்திராஜா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 103 (43.4) –  பதும் மதுஷங்க 38*, ஜீவக்க ஷஹீன் 31, கவிந்து ரித்மல் 4/30, சாமிக்க ரனசிங்க 3/42

புனித தோமியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 93/4d (28.1) – மிஹிசல் ஆமோத் 57, பதும் மதுசங்க 2/12

தேவபத்திராஜா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 71 (36.1) – சச்சிர ரஷ்மிக்க 5/10, சேனத் சிதார 2/5, நிசங்க ஜயவீர 2/31

முடிவு – புதிய தோமியர் கல்லூரி 197 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 2019 கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச்…

லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸில் 208 ஓட்டங்களை பெற்றதோடு, தமது இன்னிங்ஸை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. சுவத் மெண்டில் 96 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார்.    

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) –  208 (71.4) – பிரபாத் மதுசங்க 76, கவிந்து பெர்னாண்டோ 38, எஸ்.பீ. கம்லத் 25, மதுரம்ய விஜேசிறி 22, கவிந்து டில்ஷான் 5/63, கவுமல் நாணக்கார 3/69, சுவத் மெண்டிஸ் 2/32

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) 229/9 (62.1) – சுவத் மெண்டிஸ் 96, வினுஜ ரன்போல் 73, கவிந்து டில்ஷான் 27, மதுரம்ய விஜேசிறி 2/29, எஸ்.பீ. கம்லத் 2/20   

முடிவு – சமநிலையில் முடிவுற்றது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<