இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 2019 கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம்

633

சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் நேற்றைய (20) தினம் இலங்கை வந்தடைந்ததுடன், நேற்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வந்தடைந்துள்ள வெற்றிக் கிண்ணம், அமைச்சரும், நாட்டுக்கு 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைருவமான அர்ஜுன ரணதுங்கவினால் காட்சிப்படுத்தப்பட்டது.

Photos: ICC World Cup Trophy Tour arrives in Sri Lanka

ThePapare.com | Kandula Yatawara | 21/09/2018 Editing…

உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தை காட்சிப்படுத்தும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் எதிர்வரும் 24ம் திகதிவரை இலங்கையின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது.

இதன்படி இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள வெற்றிக் கிண்ணம், இன்று பிற்பகல் 2 மணியளவில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தில் (SLIT) வைக்கப்படவுள்ளது.

இதனையடுத்து நாளைய (22) தினம் கொழும்பு காலி முகத்திடல் பிற்பகல் 4 மணிக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. இதேவேளை நாளை மறுதினம் (24) காலை 8 மணியளவில் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக கேகாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இறுதியாக எதிர்வரும் 25ம் திகதி காலை 6 மணிக்கு சிறப்புமிக்க புகைப்படத்தினை எடுக்கும் முகமாக வரலாற்று சின்னமான சீகிரிய குன்றுக்கு உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணம் எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<