நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்த கேன் வில்லியம்சன்

74

நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) 2024/25  பருவத்திற்காக வழங்கவிருந்த வீரர்கள் ஒப்பந்தத்தினை அதன் நட்சத்திர துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

T20I போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய எஸ்தோனிய வீரர

நியூசிலாந்து அணியின் அடுத்த கோடை காலத்தில் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட விருப்பம் கொண்டிருக்கும் கேன் வில்லியம்சன் இதனை காரணம் காட்டியே நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் வீரர்கள் ஒப்பந்தத்தினை நிராகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அதேநேரம் 33 வயது நிரம்பிய கேன் வில்லியம்சன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நியூசிலாந்து அணியினை தலைவராக வழிநடாத்தி வந்த நிலையில் குறிப்பிட்ட தலைவர் பதவியினையும் இராஜினமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் 

எனினும் கேன் வில்லியம்சன் தான் குறிப்பிட்ட காலப்பகுதி தவிர்த்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவம் செய்ய எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது 

கேன் வில்லியம்சன் மூலம் வழிநடாத்தப்பட்ட நியூசிலாந்து அணியானது இம்முறைக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் கேன் வில்லியம்சன் பதவி துறந்திருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியானது மிக விரைவில் தலைவர் ஒருவரினை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.   

கேன் வில்லியம்சன் தவிர நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான லோக்கி பெர்குஸனும், நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தினை நிராகரித்திருப்பதாக சில நம்பத் தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.    

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<