உடற்தகுதி பரிசோதனையில் முழுமையாக தேர்சி பெற்ற பானுக

502

கடந்த காலங்களில் அனைவரது அவதானத்தையும் பெற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ஷ, 40 நாட்களுக்குள் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான உடற்தகுதி பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் தனது இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் பானுக ராஜபக்ஷ வெளியிட்டுள் பதிவில், Skin Fold 104 கிலோவிலிருந்து 71.5 ஆக குறைத்துக் கொண்டதன் மூலம் தான் உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, அணித் தேர்வின் போது இலங்கை வீரர்கள் 2 கிலோ மீற்றர் தூரத்தை 8.35 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும்

எனவே, குறித்த பரிசோதனையை 8.33 செக்கன்களில் ஓடிமுடித்து அந்தப் பரிசோதனையிலும் பானுக ராஜபக்ஷ தேர்ச்சி பெற்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhanuka Rajapaksa (@bhanukarajapaksa)

எனவே, குறித்த இரண்டு உடற்தகுதி பரிசோதனைகளையும் பானுக ராஜபக்ஷ வெற்றிகரமாக பூர்த்தி செய்ததால், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ளார்.

இதனிடையே, தன்னுடைய இந்த இந்த மாற்றம் குறித்து பானுக ராஜபக்ஷ வெளியிட்டிருந்த இன்ஸ்டகிராம் பதவில் குறிப்பிடுகையில்,

”கிரிக்கெட் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தான் நான் இதைச் செய்தேன். நாட்டுக்காக விளையாடுவதற்கும், எனது பூரண பங்களிப்பை வழங்குவதற்கும் தயாராக உள்ளேன் என நம்புகிறேன்.

அதேபோல, கடந்த காலங்களில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

எதுஎவ்வாறாயினும், இந்திய தொடரை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழாத்தில் பானுக ராஜபக்ஷ இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<