பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோர் கிரிக்கட் காலிறுதிகள் இன்று ஆரம்பம்

257
U15 School Cricket

பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்கு கீழ்பட்டோருக்கான ‘சிங்கர்’ கிரிக்கட் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாயின. இன்று தொடங்கிய இரு போட்டிகளில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியுடன் மொரட்டுவ பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியும், மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியுடன் மஹாநாம கல்லூரியும் மோதிக் கொண்டன. நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.

நாணய சுழற்சியை வென்ற மஹாநாம கல்லூரி புனித செபஸ்டியன் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய புனித செபஸ்டியன் கல்லூரி 72.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நதீர பெர்னாண்டோ 103 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷனில் பெர்னாண்டோ 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பவன் செனால் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மஹாநாம அணியினர் ஆட்டமுடிவின் போது 2 விக்கட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

  போட்டியின் சுருக்கம்  

புனித செபஸ்டியன் கல்லூரி – 265/10 (72.2)

நதீர பெர்னாண்டோ 103, ஷனில் பெர்னாண்டோ 56, ஜணுஷ்க பெரேரா 39, பவன் செனால் 3/52, நெத்மின ரணசிங்க 2/29

மஹாநாம கல்லூரி – 65/2 (17)

பவன் செனால் 32*, ஷனில் பெர்னாண்டோ 2/13

மற்றுமொரு போட்டியில், நாணய சுழற்சியை வென்ற பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அணியினர் புனித ஜோசப் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தனர். 43.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த புனித ஜோசப் அணியினர் 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அசத்திய நிலுக்க பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி ஆட்ட முடிவின் போது 6 விக்கட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

  போட்டியின் சுருக்கம்  

புனித ஜோசப் கல்லூரி – 151/10 (43.3)

லக்சான் கமகே 33, நிலுக்க பெர்னாண்டோ 4/37

பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி – 122/6 (43.5)

கவின் சதுஷ்க 28, லக்சான் கமகே 2/24

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்