இலங்கை டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமில் டெல் ஸ்டைன்

300

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயினுக்கு இடம் கிடைத்துள்ளது.

அதிக சுழற்பந்து வீச்சாளர்களை இணைத்திருக்கும் தென்னாபிரிக்க தேசிய அணிக்கு முதல்முறையாக ஷோர்க் வொன் பர்க் அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் சுழலில் சுருண்ட இலங்கை அணி

ட்ரினிடாட் நகரில் சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய…

அண்மைக்காலத்தில் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த டெல் ஸ்டெயின் இந்தியாவுக்கு எதிராக 2018 ஜனவரியில் கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து முதல்தர போட்டிகளில் ஹாம்ஷயர் அணிக்காக ஆடியுள்ளார்.  

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 17.3 ஓவர்கள் பந்துவீசிய நிலையில் குதிகால் காயத்திற்கு உள்ளானார். 2016 நவம்பரில் பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு பின்னர் அவர் ஆடிய முதல் டெஸ்டாக அது இருந்தது.  

இந்நிலையில் பாப் டு ப்ளசிஸ் தலைமையிலான தென்னாபிக்க குழாமுக்கு திரும்பி இருக்கும் ஸ்டெயின், மேலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் தென்னாபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷோன் பொல்லக்கின் சாதனையை முறியடிப்பார். பொல்லக் 421 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் எமது குழாத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்க செய்தியாகும். குறிப்பாக மோர்னி மோர்கலின் ஓய்வுக்கு பின்னர் இது முக்கியமானதாகும் என்று தென்னாபிக்க கிரிக்கெட் தேசிய தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் சின்டா சொன்டி குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவில் உபாதையால் பாதிக்கப்பட்ட ககிசா ரபாடாவும் முழுமையாக சுகம்பெற்று வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இருப்பதாக நம்பப்படுவதால் 15 பேர் கொண்ட குழாமில் இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் டப்ரைஸ் ஷம்சியும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் 2016 அடிலைட் ஓவல் டெஸ்டில் மாத்திரமே ஆடியுள்ளார். புதுமுக வீரரான 31 வயது ஷோன் வொன் பெர்க் 96 முதல்தர போட்டிகளில் ஆடியுள்ளார். எனினும் கேஷவ் மஹராஜ் பிரதான சுழல் வீரராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்த ஏபி.டி.வில்லியர்ஸ்

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட…….

இலங்கையில் நாம் முகம்கொடுக்க சாத்தியம் கொண்ட நிலைமைக்கு ஏற்ப முக்கியமாக எமது தேர்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று சொன்டி குறிப்பிட்டுள்ளார். கேஷவ் மஹராஜுக்கு உருதுணையாக இணைக்கப்பட்டிருக்கும் இரு மேலதிக சுழற்பந்து வீச்சாளர்களும் அண்மைக்காலத்தில் எமது முதல்தர கிரிக்கெட்டில் சிறந்த திறமையை வெளிக்காட்டியுள்ளனர். வொன் பெர்க் பின்வரிசையில் துடுப்பாட்டத்திலும் வலுச்சேர்ப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.       

மற்றொரு அனுபவமற்ற வீரராக ஹெய்ரிச் க்ளாஸன் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்தவராவார். அவர் இதுவரை டெஸ்ட் பதினொருவர் அணியில் இடம்பிடித்தில்லை.  

ஹெய்ரிச் க்ளாஸன் அனுபவமற்ற வீரராக குழாமில் சில போட்டிகளில் அங்கம் வகித்துள்ளார் என்றார் சொன்டி. அவர் குவின்டன் டி கொக்கிற்கு மேலதிகமாக விக்கெட் காப்பாளராகவும் இருப்பதோடு சிறப்பு துப்பாட்ட வீரராகவும் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் காலி (ஜுலை 12-16) மற்றும் கொழும்பில் (ஜுலை 20-24) நடைபெறவிருப்பதோடு இரு அணிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்று ஒரு டி-20 போட்டியிலும் ஆடவுள்ளன.

தென்னாபிரிக்க குழாம்

ப்ப டு ப்ளசிஸ் (தலைவர்), ஹஷிம் அம்லா, டம்பே பவுமா, குவின்டஸ் டி கொக், தெயுனிஸ் டி பிருயின், டீன் எல்கர், ஹெயின்ரிச் க்ளாஸ், கேஷவ் மஹராஜ், எய்டன் மர்க்ராம், லங்கி ந்கிடி, வெர்னொன் பிளன்டர், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, டெல் ஸ்டெயின், ஷோன் வொன் பெர்க்.