வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 21

328

2000ஆம் ஆண்டு – காலி மைதானத்தில் முரளியின் மந்திரம்

2000ஆம் ஆண்டு காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான 1ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் அபார வெற்றியை ஈட்டியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் ஆவார். அவர் முதல் இனிங்ஸில் 87 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளையும் 2ஆவது இனிங்ஸில் 84 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளையும் வீழ்த்தி மொத்தமாக அந்தப் போட்டியில் 13 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார். இது இலங்கை அணியின் வெற்றிக்கு பாரிய காரணமாக இருந்தது.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 20

ஜூலை மாதம் 21ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1863 எப்பிரி ஸ்மித் (இங்கிலாந்து)
1895 நம்மி டீன் (தென் ஆபிரிக்கா)
1945 டெப் டைமோக் (அவுஸ்திரேலயா)
1947 செத்தன் சஹுன் (இந்தியா)
1975 ரவீந்திர புஸ்பகுமார (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்