ஒலிம்பிக் நீச்சலில் கலக்கும் அமெரிக்கா, ஆஸி வீராங்கனைகள்

Tokyo Olympics - 2020

78
Tokyo Olympics 2020 Day-05
 

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஐந்தாவது நாளான இன்று (28) பதினொரு தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் நீச்சல், ஜூடோ, டைவிங், எழுவர் ரக்பி மற்றும் பளுதுக்குதல் போட்டிகள் முக்கிய இடத்தைப் பெற்றன.

எனினும், ஐந்து தங்கப் பதக்கங்களுக்காக நடைபெற்ற நீச்சலில் பல முக்கிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், இதில் அவுஸ்திரேலிய வீராங்னைகள் தங்கப் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

நீச்சல்ராணிடிட்மஸ்

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற அவுஸ்திரேலியாவின் 20 வயது இளம் வீராங்கனை அரியார்ன் டிட்மஸ் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்

2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், 2018, 2019இல் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் 4 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்திய இவர், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல்ராணியாகவலம் வருகிறார்

>> டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் ஆசிய வீரர்கள் அமர்க்களம்

இம்முறை ஒலிம்பிக்கில் 400 மீட்டர் சாதாரண நீச்சலில் தங்கம் வென்ற டிட்மஸ், இன்று நடைபெற்ற 200 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில், அமெரிக்காவின் கேட் லெடக்கியை பின்தள்ளி, 1 நிமிடம், 53.93 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து, புதிய ஒலிம்பிக் சாதனையும் படைத்து, தங்கப் பதக்கம் வென்றார்

டோக்கியோவில் இவர் வென்ற இரண்டாவது தங்கம் இதுவாகும். இந்தப் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கேட் லெடக்கி 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கேட் லெடக்கி சாதனை

ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக பெண்களுக்கான 1500 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது

இதில் துவக்கத்தில் இருப்தே சிறப்பாக செயல்பட்ட அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை கேட் லெடிக்கி, 15 நிமிடம் 37.3 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் இவர் வென்ற ஆறாவது தங்கப் பதக்கமாக இது அமைந்தது.

>> ஒலிம்பிக் இரண்டாம் நாள் முடிவில் பல சாதனைகள்

24 வயதான இவர், இன்று காலை நடைபெற்ற 200 மீட்டர் சாதாரண நீச்சலில் தோல்வியடைந்த பிறகு 1500 மீட்டர் சாதாரண நீச்சலில் தங்கப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

மற்றொரு அமெரிக்க வீராங்கனையான எரிக்கா (15 நிமிடம், 41.41 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜேர்மனியின் சாரா (15 நிமிடம் 42.91 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்

பெல்ப்ஸின் சாதனையை முறியடித்த ஹங்கேரி வீரர்

ஆண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலக் புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்போட்டியை ஒரு நிமிடம் 51.25 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், நீச்சல் உலகின் சாதனை நாயகன் மைக்கல் பெல்ப்ஸின் ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்தார்

ஆனால், போட்டி ஆரம்பமாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் மிலக்கின் உள்ளாடை லேசாக கிழிந்த காரணத்தால் அவரால் தன்னுடைய சாதனையை முறியடிக்க முடியாமல் போனதான அவர் தெரிவித்தார். ஆனாலும் ஒலிம்பிக் சாதனையுடன், ஹங்கேரிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார்

முன்னதாக குறித்த போட்டிப் பிரிவில் மைக்கல் பெல்ப்ஸ் நிகழ்த்திய உலக சாதனையை 2019இல் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் வைத்து மிலக் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> ஒலிம்பிக்கில் கலக்கிய 13 வயது சிறுமியும், 58 வயது தாத்தாவும்

113 ஆண்டுக்குப் பின்

இங்கிலாந்து ஆண்கள் அஞ்சலோட்ட அணி கடந்த 1908இல் சொந்த மண்ணில் (லண்டன்) ஒலிம்பிக் நீச்சலில் தங்கம் வென்றது. தற்போது 113 ஆண்டுகளுக்குப் பின் இதே போட்டியில் அசத்தியது

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4x200 மீட்டர் நீச்சலில் இங்கிலாந்தின் டொம், ஜேம்ஸ், மெத்யூ, டங்கன் அடங்கிய அணி, 6 நிமிடம் 58.58 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து ஐரோப்பிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

இதுதவிர, 1912இல் இங்கிலாந்து பெண்கள் அணி 4x100 மீட்டர் நீச்சலில் சாதனை படைத்த பிறகு, இங்கிலாந்து ஆண்கள் நீச்சல் அணி வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

காலிறுதியில் ஜோகோவிச்

ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின்நம்பர்–1′ வீரர் செர்பியாவின் நொவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் போகினாவை 6–1, 6–1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்

இதனிடையே, கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்டோஜனோவிச் ஜோடி, பிரேசிலின் லூசியா, மார்செலோ ஜோடியை 6–3, 6–4 என வீழ்த்தியது.

>> 63,000 சனத்தொகை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு

பிஜி தீவுகளுக்கு இரண்டாவது தங்கம்

எழுவர் ரக்பி போட்டிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றனஇதில் வெண்கலப் பதக்கதுக்காக நடைபெற்ற போட்டியில் 17-12 புள்ளிகள் அடிப்படையில் பிரித்தானியாவை வீழ்த்தி ஆர்ஜென்டீனா வெற்றி பெற்றது.

இதனிடையே, தங்கப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சம்பியன் பிஜி தீவுகள் 27-12 புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.

பதக்கப் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக்கின் நான்காவது நாள் நிறைவடையும் போது பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் இதுவரை 13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று இருந்தது

ஜப்பானைத் தொடர்ந்து, 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது

11 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<